வேப்பிலைப்பட்டி, அக். 11- அரசியலமைப்புச் சட்டம் 51A(h) மூடநம்பிக் கைக்கு இடம் கொடுக்கா மல் அறிவியல் மனப்பான் மையை வளர்க்கச் சொல் கிறது.
இது குழந்தைகளிட மிருந்தே தொடங்க வேண்டும் என்ற அடிப் படையில், பகுத்தறிவுச் சமூகத்தைக்கட்டி எழுப்ப நல்ல கருத்துகளை குழந்தைகளுக்கு விதை யாய் கொடுப்போம்!
இதன் அடிப்படையில் வேப்பிலைப்பட்டியில் 5.10.2026 மாலை 5 மணிக்கு பெரியார் பிஞ்சு வாசகர் வட்டம் தொடக்க நிகழ்வை அ.தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்தார். பெரியார் பிஞ்சு வாசகர் வட்டத்தை த.மு.சுடரொளி ஒருங்கிணைத்தார்.
