தமிழர் தலைவருடன் சந்திப்பு

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

“நன்னன் குடி” அமைப்பின் சார்பில், ’செம்மல் நன்னன்’ நினைவாக நடத்தப்பட்ட, சிறுகதைப் போட்டியில் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் தொகுப்பு நூலான, “தன்மான வாழ்வே நலவாழ்வு” மற்றும் பார்வதி நன்னன் பற்றிய தொகுப்பு நூலான, “எனதருமை அம்மாச்சி” ஆகிய நூல்களை, வேண்மாள் நன்னன், அவ்வை நன்னன் ஆகியோர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினர். (சென்னை, 17,08,2026)

திராவிடர் கழகம், நன்கொடை

இலங்கை மட்டக்களப்பு தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் சிறீநாத் (DR.SRINATH) திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து உரையாடினார். உடன், சென்னை ரோட்டரி அமைப்பைச் சேர்ந்த தனசேகரன், பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செலன். (சென்னை, 17.8.2026)

திராவிடர் கழகம், நன்கொடை

ஆவடி மாவட்டம் சார்பில், இரண்டு விடுதலை அரை ஆண்டு சந்தா ரூ.2,000/-, மற்றும் பெரியார் பெருந்தொண்டர் ஆ.வெ.நடராஜன் சார்பில், விடுதலை வளர்ச்சி நிதி ரூ.500, அம்பத்தூர் பூ.இராமலிங்கம் சார்பில், கைவல்யம் முதியோர் இல்லத்துக்கு ரூ.600/- என, நன்கொடைகள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கப்பட்டது. உடன் மாவட்டத் தலைவர் வெ.கார்வேந்தன், அம்பத்தூர் சரவணன். (சென்னை, 15.08.2026)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *