தொகுப்பு: நாகை நாத்திக.பொன்முடி
மாநில இளைஞரணி செயலாளர்
04.10.2026 ஞாயிறு காலை 9 மணி முதல் மாலை 5:30 மணி வரை தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள ராமசாமி திருமண மண்டபத்தில் தந்தை பெரியார் 148 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மகிழ்வாக பெரியார் கொள்கை குடும்பங்களின் ஒன்று கூடுகை குடும்ப விருந்து கொள்கை விழாவாக மகிழ்வுடன் கொண்டாடப் பட்டது. மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், நிகழ்வினை ஒருங்கிணைத்து நெறிப்படுத்தி நடத்தினார்.
பகுத்தறிவு பாடல் இசை நிகழ்வு:
9.30 மணிக்கு புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கலைக் குழு – மாநில கலைத்துறை செயலாளர் தெற்கு நத்தம் சித்தார்த்தன், மாநில ப.க அமைப்பாளர் கோபு, பழனிவேல், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் பாவலர் பொன்ரசு ஆகியோர் ஏராளமான கழக தத்துவப் பாடல்களை பாடினர்
மாவட்ட மகளிர் அணி தலைவர் அ.கலைச்செல்வி, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் அஞ்சுகம், நகர இளைஞ ரணி துணைத் தலைவர் அ.பெரியார் செல்வம், ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய தொழிலாளர் அணி செயலாளர் சடையார் கோவில் ராஜகோபாலன் ஆகியோர் பாடல்களைப் பாடினர். இசை நிகழ்வில் கீபோர்ட்-செல்வம், தபேல்-சுப்பையா, இசை போர்டு-அழகர், ஆகியோர் இசை கருவிகளை வாசித்தனர்.

பெரியாரை ஏன் பிடிக்கும்?
க.ஆதவன், க.செழியன்,பெற்றோர் (கந்தசாமி-துர்கா தேவி,) ஒரத்தநாடு, கவின், அமுதன், கண்ணந்தங்குடி, பகுத்தறிவு, (பெற்றோர் பொய்யாமொழி-இளவரசி).சா.ப.யாழிசை, பெற்றோர் (கோபு பழனிவேல்-சாந்தி), எ.அஞ்சுகச்செல்வன் (பெற்றோர்எழிலரசன்-ரம்யா), பெரியாரை ஏன் பிடிக்கும் எனக்கு? என்ற தலைப்பில் அவரவருக்கு உரித்தார் போல் மிக சிறப்பாக உரையாற்றினர், மாவட்டத் தலைவர் அமர்சிங் சிறப்பு செய்து பாராட்டினார்.
குழந்தைகளுடன் உரையாடல்
மாநில பொருளாளர், தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் சங்கம், கார்த்திகா-கவின்குமார் பெரியார் பிஞ்சுகள் மாணவர்களுடன் கேள்விக்கு பதில் என்கின்ற முறையில் மாணவர்களுடன் இணைந்து அனைவரையுமே மேடைக்கு அழைத்து உற்சாகமாக மாணவர்களின் உளவியலுக்கு ஏற்ப கருத்துகளை பரிமாறிக் கொண்டனர். இன்றைய சூழ்நிலையில் இளம் தலைமுறைக்கு என்ன சொல்லப் போகிறோம் என்ன செய்யப் போகிறோம் என்றவாறு உரையாடினார். கார்த்திகா கவின்குமாருக்கு வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி சிறப்பு செய்து பாராட்டினார்.
மனம் விட்டு பேசுவோம்! வாழ்வியல் பகிர்வு உரை
கண்ணுகுடி வள்ளியம்மை தண்டாயுதபாணி, தமிழ்ச் செல்வி சித்தார்த்தன், சாந்தி பழனிவேல், ரம்யா எழிலரசன், கலைவாணி வீரமணி (அகரப்பேட்டை), சாருலதா அழகிரிசாமி (வல்லம்), ஜெகதாராணி ஜெயக்குமார், அஞ்சுகம் சந்துரு, கிராம நிர்வாக அலுவலர் எழிலரசி, ராமலிங்கம், பத்மா-புரட்சிக் கவிஞர் அறக்கட்டளை, மணிமொழி குணசேகரன், பாக்கியம் ஏகாம்பரம், அகிலாம்பாள் ஜெயராமன், இந்துமதி பெரியார் செல்வன், அனுராதா வீரகுமார், மாவட்ட மகளிர் அணி செயலாளர் இ.அல்லிராணி (வடசேரி), சுமதிசக்திவேல், (ஒரத்தநாடு), ஆனந்திகோபி, கலைச்செல்வி காமராஜ், மாவட்ட துணைத் தலைவர்மலர்க்கொடி, ஆகியோர் மனம் விட்டு பேசினர். பெரியாரால் அடைந்த நன்மைகள், வாழ்க்கைப் பகிர்வுகளை பகிர்ந்து கொண்டனர்.
மேடைக்கு வருகை புரிந்து அனுபவங்களை பகிர்ந்துக் கொண்ட பெரியார் பிஞ்சுகள். மாணவர்கள், மகளிரணியினர், அனைவருக்கும் கும்பகோணம் கழக மாவட்டக் காப்பாளர். பெரியார் பெருந்தொண்டர் தாராசுரம் வை.இளங்கோவன், ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்தார். வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, பயனாடை அணிவித்து பாராட்டினார்.
ஜப்பான் செல்ல உள்ள தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங்கை வழி அனுப்பும் விதமாக மாநில துணை பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி, சிறப்பு செய்து பாராட்டினார்.
குடும்ப விழா பாடலுக்கு நடனம்
தெற்கு நத்தம் சித்தார்த்தன் இயற்றிய குடும்ப விழா பாடலுக்கு மறுங்குலம் அறுமுளை ச.ர. புகழினி ச.ர.சிறீதரன் ஆகியோர் மேடையில் சிறப்பாக நடனம் ஆடினார்.
தஞ்சாவூர் மகப்பேறு மருத்துவ நிபுணர் த,தமிழ் மணி, மயக்கவியல் மருத்துவர் த.அருமைக்கண்ணு, சித்த மருத்துவர் சுகன்யா, பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில துணைச் செயலாளர் பேராசிரியர் ந. எழிலரசன், மாரியம்மன் கோயில் சி.எஸ். மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் பொறியாளர் ப.சிவானந்தம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று கருத்துகளை பரிமாறிக் கொண்டனர். அனைவருக்கும் துணைப் பொதுச் செயலாளர் சே.மெ. மதிவதனி சிறப்பு செய்தார்.
அகரப்பேட்டை வீரமணி-கலைவாணி ஆகியோரின் பேரன் அரஞ்செயன் தந்தை பெரியார் பற்றிய கவிதையை மேடையில் வாசித்தார். அவருக்கு சிறப்பு செய்யப்பட்டது.
சே. மெ.மதிவதனி சிறப்புரை
கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே. மெ. மதிவதனி சிறப்புரையாற்றினார் தஞ்சை குடும்ப விழாவில் பங்கேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அரங்கம் முழுவதும் கழக கொள்கைக் குடும்பங்கள் இரண்டு வாரத்திற்கு முன்னதாகத் தான் நம் குடும்பத் தலைவர் பெரியார் நடையை சிறப்பாக துவங்கி வைத்து ஏறக்குறைய 3 கிலோமீட்டர் வரை 93 வயதிலும் உற்சாகத்துடன் நடந்ததையும். ஆசிரியருக்கு பின்னால் அனைவரும் ஓடியதையும்… (சிரிப்பு … கைத்தட்டல்….) பார்க்க முடிந்தது. எந்த நிகழ்வானாலும் தஞ்சாவூர் தமிழ்நாட்டி லேயே முன் உதாரணமாக ஒவ்வொரு நிகழ்வினையும் நடத்தி வருகின்றனர்.
இயக்கத்தில் இருப்பது அல்லது பயணிப்பது. லாபமா? நட்டமா? என்று பரிசோதித்துப் பார்த்தால் 100 சதவீதம் லாபம் தான். நமக்கு எந்தப் பண்டிகையும் கிடையாது. கொண்டாட மாட்டோம் பெரியார் பிறந்த நாள் தான் மக்களெல்லாம் உண்மையான உன்னதமான விழா என்று சிறப்பாக உரை யாற்றினார். மதிவதனி அவர்களுக்கு மேயர் மருத்துவர் அஞ்சுகம் பூபதி சிறப்பு செய்தார்.
டாக்டர் அஞ்சுகம்பூபதி வாழ்த்துரை
மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, பேசுகையில் இன்று பெண்கள் பெரும் பெரும் பதவிகளை வகிக்கிறார்கள் அதிகம் படித்துள்ளார்கள். பெரும் பணிபுரிகிறார்கள்.
அதற்கு சாட்சி நானே உங்கள் முன் மருத்துவராகவும் தஞ்சை மாநகர மேயராகவும் இருக்கின்றேன். இதற்கெல்லாம் காரணம் அடித்தளம் விட்டவர் பெரியார்.
இதுபோன்ற பெரியார் கொள்கை குடும்ப விழாக்கள் ஒவ்வொரு ஆண்டும் நடத்த வேண்டும், நான் திராவிடர் கழக குடும்பத்தில் மணம்முடித்ததால் எனது பொது வாழ்க்கைக்கு மிகவும் உதவியாகவும் தடையில்லாமல் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று உரையாற்றினார்.
பெரியார் நடை மற்றும் குடும்ப விழாவை மிக எழுச்சியுடன் நடத்திய மாநகரத் தலைவர் செ.தமிழ்ச் செல்வன், மாவட்டத் தலைவர் சி.அமர்சிங் மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாவட்டத் துணைத் தலைவர் பா நரேந்திரன், மாநகர செயலாளர் இரா.வீரக்குமார், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், மாநகரதுணைச் செயலாளர் இரா.இளவரசன், பகுதி தலைவர் சாமி.கலைச்செல்வன், பகுதி செயலாளர் வெ.துரை, விடுதலை வாசகர் வட்ட செயலாளர் ஏ.வி.எம். குணசேகரன், விடுதலை வாசகர் வட்ட துணைச் செயலாளர் ச.விஸ்வநாதன், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுபட்டு அ.இராமலிங்கம். மாநில மாணவர் கழகச் செயலாளர் இரா.செந்தூர்பாண்டியன், மாவட்டத் தொழிலாளர் அணி தலைவர் ச.சந்துரு, கவிஞர் பகுத்தறிவுதாசன், குழந்தைசாமி, மாநில ப.க அமைப்பாளர் கோபு.பழனிவேல், மாவட்ட ப.க. செயலாளர் பாவலர்.பொன்னரசு, பெரியார் சமூகக் காப்பு அணி இயக்குநர் தே.பொய்யாமொழி, நிகழ்வினை ஒலிபரப்பு செய்த மாவட்ட இளைஞரணி தலைவர் ஆ.பிரகாஷ், பாரதிதேவா, மாநில இளைஞரணி செயலாளர் நாகை நாத்திக.பொன்முடி, அரங்கத்தின் மேலாளர் வெண்மணி, பணியாளர் சின்னையன், பெரியார் நடைக்கும், பெரியார் கொள்கை குடும்பங்கள் சந்திப்பு விழாவிற்கும் மிகச் சிறப்பாக பாடல்கள் எழுதி இசையமைத்து பாடலை உருவாக்கிய மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், ஆகியோர்களுக்கு மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி பயனாடை அணிவித்து சிறப்புச் செய்து பாராட்டினார்.

சட்ட எரிப்பு வீரருக்கு பாராட்டு
பூதலூர் நகரத் தலைவர் சட்ட எரிப்புப் போராட்ட வீரர் செல்லமுத்து அவர்களுக்கு கழகத் துணைப் பொதுச் செயலாளர் சே. மெ.மதிவதனி பயனாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
பெரியார் நடை மற்றும் குடும்ப விழாவை மிகச் சிறப்பாக நடத்துவதற்கு அனைவரையும் ஒருங்கிணைத்து இயக்கிய மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமாருக்கு தஞ்சையின் தலைசிறந்த மகப்பேறு மருத்துவர் டாக்டர் த.தமிழ்மணி பயனாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
2.35 மணிக்கு திண்டுக்கல் ஈட்டி கணேசனின், மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்கம். மூட நம்பிக்கை ஒழிப்பு. சாமியார்கள் ஏமாற்று வேலை. நல்ல நேரம். கெட்ட நேரம். போன்ற பித்தலாட்டங்களை விளக்கி செய்முறை வடிவில் விளக்கி மந்திரம் இல்லை எல்லாம் தந்திரமே என கவி பாரதி, விஷாலி, புகழினி, சிறீதரன், கௌசிகா, சிவா, நவீன், ஆகியோரை மேடைக்கு அழைத்து செய்முறை விளக்கமளித்து காட்டினார்.
சிலம்பாட்டம்:
ஒரத்தநாடு கண்ணந்தங்குடி கீழையூர் எலந்தவெட்டி க.ஆதவன், க.செழியன், தஞ்சை வீ.மகிழன்ஆகியோர் சிலம்பாட்டம் செய்தனர். அனைவருக்கும் மாவட்டத் தலைவர் அமர்சிங் சிறப்பு செய்து பாராட்டினார்.
விளையாட்டுப் போட்டிகள்:
மாலை 3.30 மணிக்குக் குடும்ப விழாவில் அனைவரும் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர். பெரியார் சமூகக் காப்பு அணி இயக்குநர் தே.பொய்யா மொழி, ச.சித்தார்த்தன், ஆ.பிரகாஷ், ஆ.ரமேஷ் ஆகியோர் போட்டிகளை நடத்தினர்.
காங்கிரஸ் கட்சியின் மேனாள் மாவட்ட தலைவர் விடுதலை வாசகர் வட்ட தலைவர் பி.ஜி.ராஜேந்திரன், திமுக பொதுக்குழு உறுப்பினர் திராவிட.கதிரவன், திமுக தலைமைக் கழக சொற்பொழிவாளர் ஆம்பல் நேதாஜி, உள்ளிட்டோர் பங்கேற்று பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
பெரியார் பிஞ்சுகள், மாணவர்கள், இளைஞர்கள், மகளிர் தோழர்கள் பாடல், ஆடல், விளையாட்டுப் போட்டிகள், பெரியாரில் வாழ்வியல் முறையின் அனுபவங்கள் குறித்து கருத்துக்களைக பகிர்ந்து கொண்டனர்
பெரியார் பிஞ்சுகள், மாணவர்கள், இளைஞர்கள்,மகளிர் தோழர்கள், கழகத் தோழர்கள், பெரியார் பற்றாளர்கள், பெரியார் பெருந்தொண்டர்கள் என தலைமுறை இடைவெளி இல்லாமல் 300 க்கு மேற்பட்ட தோழர்கள் 5 பெண் மருத்துவர்கள் 4 பெண் மருத்துவ மாணவர்கள் பொறியாளர்கள் கல்லூரி பள்ளி மாணவர்கள் மழலைச் செல்வங்கள் தலைமுறை இடைவெளி இல்லாமல் பங்கு பெற்று கொண்டாடி மகிழ்ந்தனர்.
மரக்கன்றுகள் வழங்குதல்
நிகழ்ச்சி முடிந்து திரும்பும் போது சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. நிகழ்விற்கு ஒத்துழைப்பு வழங்கிய உழைத்த அனைத்து பொறுப்பாளர்களுக்கும் தோழர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
கொள்கை குடும்பங்கள் அனைவருமே புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கலைந்து சென்றனர்.
நிகழ்வில் தகவல் தொழில் நுட்ப அணி மாநில செயலாளர் வி.சி.வில்வம், கழகத் தலைமை கழக சொற்பொழிவாளர் இரா. பெரியார்செல்வன், ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர் இரா.துரைராசு, தஞ்சை தெற்கு ஒன்றிய தலைவர் இரா,சேகர், திருவையாறு ஒன்றிய தலைவர் ச. கண்ணன், பெரியார் பெருந்தொண்டர் வல்லம் மணியன்,பூதலூர் ஒன்றிய துணை செயலாளர் ஒன்றிய செயலாளர் ப.விஜயகுமார் பூதலூர் ஒன்றிய செயலாளர் அல்லூர் இரா. பாலு, பூதலூர் ஒன்றிய தலைவர் மா.வீரமணி, திருவோணம் ஒன்றிய தலைவர் சாமி. அரசியளங்கோ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
