அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல் நடக்க இருப்பதால் ஈரான் மீது தாக்குதல் நடத்தப் போவதில்லை: டிரம்ப்

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

நியூயார்க் அக். 9- அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் நடப்பதற்கு முன் ஈரான் மீது தாக்குதல் இல்லை என டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து, ஈரான் நாட்டை கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி வான்வழியாக கடுமையாக தாக்கின. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்தது. அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஏற்பட்ட இந்த மோதல் ஏறக்குறைய 8 மாதங்களாக நீடித்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஈரான், ஹார்மூஸ் நீரிணையை தன்னு டைய கட்டுப்பாட்டில் எடுத்து கொண்டுள்ளது. இதனால், உலக அளவில் சரக்குக் கப்பல் போக்கு வரத்து கடுமையாக பாதிப்படைந்து உள்ளது.

எனினும், ஈரான் – அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் ஏற்படுத்தப் பட்டு, நிலைமை கட்டுக்குள் வந்தது. மேற்காசிய பகுதியில் பதற்றம் சற்று தணிந்தது. ஆனால், இரு நாடுகளும் அவ்வப்போது தாக்குதலில் ஈடுபட்டன.

இந்த நிலையில், அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல் நடப்பதற்கு முன் ஈரான் மீது தாக்குதல் இல்லை என டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

இதுதொடர்பாக அவர் ட்ரூத் சமூக ஊடகத்தில் வெளியிட்டச் செய்தியில், ஈரானுடன் ஆக்கப்பூர்வ ஆலோசனை நடத்தினோம். உங்களுக்கு ஒன்றை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். பொருளாதாரம் மற்றும் ராணுவம் என்ற அடிப்படையில், ஈரானின் நிலைமை மோசமடைந்து உள்ளது.

அதனால், அமெரிக்காவில் நவம்பர் 3ஆம் தேதி இடைக்காலத் தேர்தல் நடப்பதற்கு முன் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படாது. ஈரானிடம் அணு ஆயுதம் இருக்காது என்று தெரிவித்து உள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *