திருவாரூரில் நடைபெற்ற நூல் அறிமுக விழா

3 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

திருவாரூர், அக். 9- நன்னிலம் ஒன்றிய கழகச் செயலாளரும், பணி நிறைவு பெற்ற ஆசிரியருமான முனைவர் சு.ஆறுமுகம் எழுதிய 1.பெரியார் சிந்தனைகளும் மூடநம்பிக்கை ஒழிப்பும் 2. மூடநம்பிக்கைகள் பலவிதம் அவை ஒவ்வொன்றும் ஒருவிதம் 3. இன்னும் எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே 4. நெறிப்பட வாழ்தலே அறம் ஆகிய நூல்கள் அறிமுக விழா திருவாரூர் திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகம் சார்பில்  திராவிடர் கழக மாவட்ட அலுவலகத்தில் 19.09.2026 அன்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு திருவாரூர் மாவட்ட கழகத் தலைவர் எஸ் எஸ் எம் அருண் காந்தி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பிளாட்டோ வரவேற்புரையாற்றினார்.

மூடநம்பிக்கைகள் பலவிதம் அவை ஒவ்வொன்றும் ஒரு விதம் நூல் அறிமுக உரையாக தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் அயலக தமிழியல் துறை இணை பேராசிரியர் முனைவர்  வெற்றிச்செல்வன் அவர்கள் பகுத்தறிவு வளர வளர மூடநம்பிக்கை வீழும். தந்தை பெரியாரின் பகுத்தறிவு பிரச்சாரம் ஏற்படுத்திய மாற்றங்கள் ஏராளம் ஏராளம். பகுத்தறிவுபூர்வமான செயல் பாடுகளை வளர்த்தெடுப்பதன் மூலமாகத்தான் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க முடியும்.

இந்த நூல் அறிமுக விழாவை அப்படித்தான் பார்க்கிறேன். லோக்கல் குருவோ ரேப் கேசில் உள்ளூர் சிறையில். லோக குருவோ மர்டர் கேசில் மத்திய சிறையில். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்ற கார்ட்டூனிஸ்ட் மதியின் கருத்துப் படத்தை நினைவூட்டினார்.

அறிவியல் பூர்வமான செய்திகள் மக்களை அவ்வளவாக சென்றடைவதில்லை அவ்வாறு சென்றலும் மக்கள் அதை ஏற்றுக் கொள்வதில்லை.  நூல் 11 உட்தலைப்புகளாக தொகுக்கப் பட்டு மூடநம்பிக்கை சார்ந்த தகவல்களை தாங்கி வருகின்றது என்றும் குழந்தைப்பேறு இல்லாத பெண்களுக்கு குழந்தை பிறக்க தன் வாயின் மூலம் வாழைப்பழத்தை ஊட்டி விட்ட சாமியார் பற்றியும்,  பெண்கள் நாய்க்கு ஒப்பானவர்கள் என அனிருத்தாச் சாமியார் சொன்னதாக நூலாசிரியர் சொல்வதையும்,  போலோ சாமியாரின் வாகனச் சக்கரம் பதிந்த  மண்ணை எடுத்து நெற்றியில் பூசிக்கொள்ள எழுந்த கூட்ட நெரிசலில் பலர் இறந்ததை நூலில் கூறப்பட்டுள்ளதை நினைவு கூர்ந்து மனிதன் தனக்குள் இருக்கும் மூடநம்பிக்கையால் தன் அறிவின் மூலம் அடைய வேண்டிய வளர்ச்சியை அடையாமல் இருக்கிறான் என்ற பெரியாரின் கருத்தைக் கூறி நிறைவு செய்தார்.

இன்னும் எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற நூல் அறிமுகவுரை நிகழ்த்திய தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் செங்குட்டுவன் இந்நூல் 117 குறுத்தலைப்புகளைக்கொண்டு  பல்வேறு வித்தியாசமான தகவல்களை கொண்டுள்ளது. ஒரு சிலவற்றை மட்டும் கூறுகிறேன் என மாடுகள் பி ஏ, எம் ஏ படிக்க வில்லை. தாயின் இதயத்தை காதலிக்கு தரப் புறப்பட்ட காதலன், எது சரியானதோ அதை செய் (கன்பூசியஸ்), தங்கைக்கே துரோகம் செய்த சகோதரர்கள்,  பலாப்பழத்துடன் நின்ற விவசாயி,  தமிழ் மொழியின் சிறப்பு,  எருமை மாட்டை ஏன் வணங்குவதில்லை,  பத்தினிப் பெண்களின் பெயரை சொல்லுங்கள், இதயத்தையே கொடு, புத்தமார்க்கம் என்பது உண்மையை சார்ந்தது, முழுப் பூசணிக்கையை சோற்றுக்குள் மறைக்கலாம், நான் ஒரு வேலையில்லா பட்டதாரி, கழுதைக்கும் நாய்க்குமான உரையாடல், என் வாழ்நாளையும் ஒரு மாதமாய் குறைத்துக் கொண்டேன்,  முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய், என்னங்க குழம்பு எப்படி இருக்கு, இறந்தவர் உயிருடன் திரும்பி வரவேண்டும் போன்றவற்றை நகைச்சுவையுடன் விளக்கினார்.

நெறிபட வாழ்தலே அறம் என்ற நூலின் அறிமுக உரை நன்னிலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் முனைவர்  கார்த்திகேயன் தனது உரையில் இந்நூல் 79 பொருளடக்கங்களை கொண்டுள்ளது என்றும், அதில் மாய உலகை எதிர் நோக்கி இன்றைய மகிழ்வை இழத்தல், உலகம் ஒரு கண்ணாடி,  காதலுக்கு மரியாதை,  கோப்பையில் சூடான தேநீர்,  கல்லில் எழுதுங்கள்,  சேமிப்பு என்னும் பாதுகாப்பு,  மூடநம்பிக்கையின் முடைநாற்றம், வாய்ப்புகளை உருவாக்குங்கள்,  களப்பிரர் காலம் இருண்ட காலமா? நான் உணர்ந்ததை கற்றுக் கொடுக்கிறேன்,  ஒரு நல்ல வாழ்க்கை என்பது ஒரு வினாடிப்பொழுது ஆகியவற்றை விளக்கி சுவைபட கூறினார்.

பெரியார் சிந்தனைகளும் மூடநம்பிக்கை ஒழிப்பும் என்ற நூல் குறித்து முனைவர் பசுருதீன் மூடநம்பிக்கை விளக்கம்,  வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் மூடநம்பிக்கை,  சோதிடத்தில் மூடநம்பிக்கை,  தலையில் தேங்காய் உடைத்தல்,  நல்ல நேரம் கெட்ட நேரம்,  மூடநம்பிக்கையின் பெய ரால் விரயமாகும் காலங்கள்,  மூடநம்பிக்கை சார்ந்த சடங்குகள்,  கைரேகை,  சோதிடம்,  சோதிடர்கள், வாஸ்து, அட்சய திரு தியை போன்றவற்றை நகைச்சுவை யுடன் விளக்கினார்.  நூலாசிரியர் முனைவர் ஆறுமுகம் ஏற்புரையையும், நன்றியுரையையும் வழங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *