தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக மாணவர்கள் வரும் பத்தாம் தேதி ஜந்தர் மந்தரில் பெரும் போராட்டம்!

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

புதுடில்லி, அக்.9- தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள், மாணவர் அமைப்புகள் மற்றும் சமூக நல அமைப்புகள் உள்ளிட்டவை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ‘கரப்பான் பூச்சி மக்கள் கட்சி’யும் (சிஜேபி) வருகின்ற அக்டோபர் 10 அன்று டில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

அக்டோபர் 10ஆம் தேதி டில்லி ஜந்தர் மந்தரில் நடைபெற உள்ள போராட்டத்தைத் தடுக்க காவல்துறை முயற்சிப்பதாக ஏற்கெனவே சிஜேபியினர் குற்றம் சாட்டியிருந்தனர். இந்நிலையில், போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வாங்க 7.10.2026 அன்று சிஜேபியின் முக்கிய தலைவர் சவுரவ் தாஸ் நாடாளுமன்ற வீதியில் உள்ள காவல் நிலையத்துக்கு வருகை தந்தார்.

அப்போது, அவர் பேசுகையில், ”தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி டில்லியில் மிகப் பெரிய போராட்டம் நடக்க உள்ளது. இந்த போராட்டத்தை இளைஞர்கள் நாடு முழுவதும் கொண்டுசெல்ல வேண்டும். முன்பு நடைபெற்ற போராட்டத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தது. தற்போது, போராட்டம் குறித்த அறிவிப்பை காவல்துறைக்குத் தெரிவிக்க வந்துள்ளோம்” என்று கூறினார்.

தேர்தல் ஆணையர் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஒரு கட்சியின் வெற்றிக்கு வழிவகை செய்யும் வகையில் பல முறைகேடான சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. எனவே, நாட்டின் ஜனநாயகத்தைக் காக்க முறைகேட்டில் ஈடுபட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டுமென நாடு முழுவதும் போராட்டம் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *