இனி ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு கைது செய்யும் அதிகாரம் இல்லை!

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

புதுடில்லி, அக். 09- ஜிஎஸ்டி அதிகாரிகளின் கைது அதிகாரம் ரத்து செய்யப்படுவதற்கு, டில்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

57-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கர்நாடகா, ஹரியானா, கோவா, ஜம்மு காஷ்மீர், டில்லி உள்ளிட்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள், நிதி அமைச் சர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், “ஜிஎஸ்டி அதிகாரிகளின் கைது அதிகாரம் ரத்து செய்யப்படவும், வழக்கு தொடங்குவதற்கான வரம்பு ரூ.1 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக உயர்த்தவும் ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

குறைந்தபட்ச தண்டனை முறை நீக்கப்பட்டு, அபராதம் அல்லது சிறைத் தண்டனை அல்லது இரண்டும் என தண்டனையை தீர்மானிக்கும் அதிகாரம் நீதித்துறை முடிவுக்கு விடப்படுகிறது.

வருமான வரித் தாக்கல் தாமதமாக செய்தாலோ, தவறு செய்தாலோ வரி செலுத்துவோருக்கு அபராதம் மட்டுமே விதிக்கப்படும். அதற்கு மேற்பட்ட நடவடிக்கைகள் இருக்காது. பொது அபராதத் தொகை ரூ.25,000-ல் இருந்து ரூ.10,000 ஆக குறைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிகழ்ச்சி நிரலில் உள்ள அனைத்து அம்சங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சீர் திருத்தம் தொடர்பான நிகழ்ச்சி நிரலின் அனைத்து அம்சங்களும் 2027, ஏப்ரல் 1 முதல் நடைமுறைப்படுத்தப் படும்” என தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *