சுயமரியாதைச் சுடரொளி சண்முக வடிவு அவர்களின் 16 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (08.10.2026) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை அளிக்கப்பட்டது. இவர் நெல்லை மாவட்ட கழகக் காப்பாளர் இரா.காசியின் இணையரும், வாசுகி, வசந்தி, அழகிரி ஆகியோரின் தாயாருமாவார். மறைந்த சண்முகவடிவு அவர்களின் உடல், தென் மாவட்டங்களிலேயே முதல்முறையாக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 11.10.2010 அன்று உடற்கொடையாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
