திருச்சி, அக். 7- திருச்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 148ஆம் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி அக்.2 ஆம் தேதி திருச்சி ரயில் நிலையம் அரு கிலுள்ள அருண் ஓட்டல், மேக்ஸி அரங்கில் காலை 10 மணியளவில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ப.க. செயலாளர் பி.மலர்மன்னன் தலைமை வகித்தார். பொறியாளர் தி.த.சண்முகவடிவேல் வரவேற்பு ரையாற்றினார்.
பேச்சுப் போட்டி:
பேச்சுப் போட்டிக்கான தலைப்பு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு : வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார், தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள், அறிவியல் மனப்பான்மையும், மூடநம்பிக்கையும்
கல்லூரி மாணவர்களுக்கு : நூற்றாண்டு கால மாற்றத்தில் தந்தை பெரியாரின் பங்கு, தந்தை பெரியாரின் பண்பாட்டுப்புரட்சி, என்றும் தேவை பெரியார். பேச்சுப்போட்டியில் 10 பள்ளி களில் இருந்து 15 மாணவர்களும், 13 கல்லூரிகளில் இருந்து 15 மாணவர்களும் கலந்து கொண் டனர்.
நடுவர்:
மேனாள் மாவட்ட நீதியரசர் தி.பாலகிருஷ்ணன், திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு.செயலாபதி, களம் அமைப்பு தோழர் என்.சேதுராமன் ஆகியோர் நடுவர்களாக செயல் பட்டனர்.
பரிசுகள்:
பள்ளி அளவில் திருச்சி பெரியார் மெட்ரிக் பள்ளி மாணவி மு.சுரேகா, திருச்சி புனித அன்னாள் பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவி ஆர்.சுமையா அஜிரின் ஆகியோருக்கு முதல் பரிசு ரூ. 2 ஆயிரம் ரொக்கம் மற்றும் நூல்கள் வழங்கப் பட்டன. கூத்தூர், விக்னேஷ் வித்யா லயா மேல்நிலைப்பள்ளி மாணவர் எஸ்.எ.மகிழன் இரண்டாம் பரிசு ரூ.1500 ரொக்கம் மற்றும் நூல்கள் வழங்கப்பட்டன.
கலைஞர் கருணாநிதி நகர் வேளாங்கண்ணி மெட்ரிக் பள்ளி மாணவிகள் ஜெ.பிரசில்லா ஜெபராணி, பிரியன்திகா ஆகி யோர் மூன்றாம் பரிசு தலா ரூ. 500 ரொக்கம் வழங்கப்பட்டது.
கல்லூரி அளவில் துறையூர் திருமலை சினீவாசன் கல்வியியல் கல்லூரி மாணவி ந.காருண்யா-வுக்கு முதல் பரிசு ரூ.2000 ரொக்கம் வழங்கப்பட்டது.
திருச்சி அரசு சட்டக்கல்லூரி மாணவி மு.காவியா இரண்டாம் பரிசு ரூ.1500 ரொக்கம் வழங்கப் பட்டது.
கோவை பாரதியார் பல்கலைக் கழக மாணவர் ம.கே.கவுதம், காவேரி கல்லூரி மாணவி எஸ்.பவித்ரா ஆகியோருக்கு மூன்றாம் பரிசாக தலா ரூ.500 ரொக்கம் வழங்கப்பட்டது.
கலந்து கொண்டோர்
திருச்சி மாவட்ட கழகத் தலைவர் ஞா. ஆரோக்கியராஜ், பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் இரா.மணியன், பென்னி, குத்புதீன், பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், கல்பாக்கம் ராமச்சந்திரன் மற்றும் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
