இந்திய ரயில்வேயில் நிரப்பப்பட 590 துணை மருத்துவ காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து அக்டோபர் 14ஆம் தேதிக்குள் இணைய வழி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: நர்சிங் சூப்பரிண்டெண்ட்
காலியிடங்கள்: 365
ஊதியம்: மாதம் ரூ.44,900 + விதிகளுக்கு உள்பட்ட பிற சலுகைகள் மற்றும் படிகளும் வழங்கப்படும்.
பணி: டயாலிசிஸ் டெக்னீசியன்
காலியிடங்கள்: 1
ஊதியம்: மாதம் ரூ.35,400 + விதிகளுக்கு உள்பட்ட பிற சலுகைகள் மற்றும் படிகளும் வழங்கப்படும்.
பணி: ஹெல்த் & மலேரியா இன்ஸ்பெக்டர் கிரேடு II
காலியிடங்கள்: 43
ஊதியம்: மாதம் ரூ.35,400 + விதிகளுக்கு உள்பட்ட பிற சலுகைகள் மற்றும் படிகளும் வழங்கப்படும்.
பணி: ஆடியோலாஜிஸ்ட் & ஸ்பீச் தெரபிஸ்ட்
காலியிடங்கள்: 1
ஊதியம்: மாதம் ரூ.35,400 + விதிகளுக்கு உள்பட்ட பிற சலுகைகள் மற்றும் படிகளும் வழங்கப்படும்.
பணி: ஃபார்மசிஸ்ட் (என்ட்ரி கிரேட்)
காலியிடங்கள்: 118
ஊதியம்: மாதம் ரூ.29,200 + விதிகளுக்கு உள்பட்ட பிற சலுகைகள் மற்றும் படிகளும் வழங்கப்படும்.
பணி: ரேடியோகிராபர் எக்ஸ்ரே டெக்னீசியன்
காலியிடங்கள்: 25
ஊதியம்: மாதம் ரூ.29,200
பணி: இ.சி.ஜி. டெக்னீசியன்
காலியிடங்கள்: 4
ஊதியம்: மாதம் ரூ.25,500 + விதிகளுக்கு உள்பட்ட பிற சலுகைகள் மற்றும் படிகளும் வழங்கப்படும்.
பணி: ஆப்டோமெட்ரிஸ்ட்
காலியிடங்கள்: 2
ஊதியம்: மாதம் ரூ.25,500 + விதிகளுக்கு உள்பட்ட பிற சலுகைகள் மற்றும் படிகளும் வழங்கப்படும்.
பணி: லேப் அசிஸ்டெண்ட் கிரேட் II
காலியிடங்கள்: 31
ஊதியம்: மாதம் ரூ.21,700
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.
வயதுவரம்பு: 1.1.2026 தேதியின்படி 18 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி, இடஒதுக்கீடு சலுகை பெறும் பிரிவினருக்கு அதிகபட்ச வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: இணைய வழி எழுத்துத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் ரூ.500. எஸ்சி, எஸ்டி, பெண்கள், பொருளாதாரத்தில் பின்தங்கி பிரிவினருக்கு ரூ.250. தேர்வு எழுதிய பின்னர் முழு கட்டணமும் திரும்ப வழங்கப்படும். கட்டணத்தை இணைய வழி மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?: rrbapply.gov.in என்ற இணையதளம் மூலம் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.10.2026
