அடிப்படை வசதிகள் வேண்டி அண்ணா அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்!

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

விழுப்புரம். அக். 7- விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள அண்ணா அரசுப் பொறியியல் கல்லூரியில் உணவு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அண்ணா அரசு பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். கல்லூரி வளாகத்திலேயே மாணவர்களுக்கான விடுதியும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், கல்லூரி மற்றும் விடுதியில் உணவு, கழிப்பறை, குடிநீர் விநியோகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை என மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தரக் கோரி 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேராசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட்ட சமாதானத்தை ஏற்க மறுத்த மாணவர்கள், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தைத் தொடர்வதாகத் தெரிவித்தனர். மேலும், கல்லூரி முதல்வர் உத்தரவின் பேரில் கல்லூரி வளாகத்திற்குள் காவல்துறையினரையும் செய்தியாளர்களையும் அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே கல்லூரியில் ஆய்வு மேற்கொண்ட சமூக நீதித் துறை அமைச்சர் வன்னியரசு, மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை தங்களுக்கு தேவையான எந்தவொரு அடிப்படை வசதிகளும் முழுமையாக செய்து தரப்படவில்லை என மாணவர்கள் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து, அதிகாரிகள் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்களுடன் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு மாணவர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாகக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *