தஞ்சை, அக். 6- தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் தஞ்சையில் 4-10-2026 ஞாயிறு மாலை 6:30 மணி அளவில் தஞ்சாவூர் ஆர்.ஆர்.நகரில் மிக எழுச்சியுடன் நடை பெற்றது கழக துணைப் பொதுச் செயலாளர் சே.மெ. மதிவதனி சிறப்புரையாற்றினார்.
தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி தொடக்க உரையாற்றினார் தொடக்கத்தில் ஈட்டி கணேசனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெற்றது. திராவிடர் கழக தஞ்சை மாநகரச் செயலாளர் இரா.வீரகுமார் நிகழ்விற்கு தலைமையேற்று உரையாற்றினார்.
புதிய பேருந்து நிலையப் பகுதி தலைவர் சாமி.கலைச்செல்வன் அனைவரையும் வரவேற்று உரை யாற்றினார் விடுதலை வாசர் வட்ட துணைச் செயலாளர் விஸ்வநாதன் விடுதலை வாசகர் வட்டச் செயலாளர் ஏ.வி.என் குணசேகரன் தஞ்சை தெற்கு ஒன்றியச் செயலாளர் நெல்லுப்பட்டு இராமலிங்கம், மாவட்டத் துணைத் தலைவர் பா.நரேந்திரன், திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் இரா. செந்தூரபாண்டியன், மாநில இளைஞரணித் துணைச் செயலாளர் இரா. வெற்றிகுமார், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கோபு.பழனிவேல், மாநில கலைத்துறைச் செயலாளர் ச. சித்தார்த்தன், தஞ்சை மாநகர தலைவர் செ. தமிழ்ச்செல்வன், தஞ்சை மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.
திராவிடர் கழக மாநில ஒருங் கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில துணைச் செயலாளர் பேராசிரியர் ந.எழிலரசன், மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி, ஆகியோர் பாராட்டுரையாற்றினர்.
பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் பாவாணர் பொன்னரசு, கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன், விடுதலை வாசகர் வட்ட செயற்குழு உறுப்பினர் குழந்தைசாமி, தஞ்சை மாநகர துணைச் செயலாளர் இரா.இளவரசன், விஜயலட்சுமி, நரேந்திரன், ஜெகதாராணி ஜெயக்குமார், அமுதா ராமலிங்கம், தெற்கு நத்தம் ச.முத்துச்செல்வன், பகுத்தறிவாளர் கழக மாநில ஊடகப்பிரிவு தலைவர்
மா.அழகிரிசாமி, வழக்குரைஞர் அணி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் இரா. சரவணகுமார் மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் மலர்கொடி கண்ணை அரங்க.குமரவேல், தஞ்சை மாநகர பகுத்தறிவு கலை இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் பகுத்தறிவுதாசன், திமுக மெடிக்கல் பகுதி பொருளாளர் மனோகரன் 51ஆம் வார்டு வட்ட திமுக பொறுப்பாளர் செழியன், உள்ளிட்ட திராவிடர் கழக மாநில மாவட்ட ஒன்றிய மாநகரப் பொறுப்பாளர்கள், தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஏராளமான பொதுமக்கள் திரண்டு உரையை கேட்டனர்.
புதிய பேருந்து நிலையப் பகுதிச் செயலாளர் வெ.துரை நன்றி கூறினார். தந்தை பெரியார் பிறந்த நாள் மகிழ்வாக அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
