மோசமான சாலை: தொட்டில் கட்டித் தூக்கிச் செல்லப்பட்ட கர்ப்பிணி!

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

ஜார்க்கண்ட், அக்.6- ஜார்க்கண்டில் கிராமத்தில் மோசமான சாலை காரணமாக கர்ப்பிணிப் பெண் தற்காலிகத் தொட்டில் மூலம் முக்கிய சாலைக்குத் தூக்கிச் செல்லப் பட்டார்.
ஜார்க்கண்ட் மாநிலம், கும்லா மாவட்டத்தில் உள்ள குனியா கிராமத்தைச் சேர்ந்த ஹிரா குமாரி என்ற கர்ப் பிணியைப் மகப்பேற்றிற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவிருந்தனர்.
அப்போது, சேறும் சகதி யுடனும், பெரிய குழிகளுடனும் காணப்பட்ட சாலையைக் கடக்க முடியாது என்று ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தெரிவித்துவிட்டார்.
இதையடுத்து, கிராம மக்கள் இரண்டு பேரின் உதவியுடன் அப்பெண்ணைக் கிராமத்தி லிருந்து முக்கிய சாலை வரை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு தற்காலிகத் தொட்டில் மூலம் தூக்கிச் சென்றனர். அதன் பிறகு, அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவர் கும்லா சதார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மழையின் காரணமாகச் சாலை மேலும் சேதமடைந்து விட்டதாகவும், இதனால் வாகனங்கள் கிராமத்திற்குள் வருவது கடினமாகிவிட்டதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
விரைவில் சாலையின் நிலைமை மேம்படுத்தப்பட வில்லை என்றால், அவசர காலங்களில் தீவிர நோயாளி களையோ அல்லது கர்ப்பிணி பெண்களையோ உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது பெரும் சிரமமாக மாறிவிடும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *