தாராபுரத்தில் ஜனநாயகம் துகிலுரியப்படுகிறதா? : நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் பரபரப்பு அறிக்கை!

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

கோவை, அக் 05 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் தாராபுரம் தொகுதியில் நிலவும் வன்முறை மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்து சமூக வலைதளத்தில் வெளியிட் டுள்ள கடுமையான குற்றச்சாட்டுகள் அர சியல் வட்டாரத்தில் பெரும் அதிர்லையை ஏற்படுத்தியுள்ளன.

தாராபுரத்தில் தற் போதைய தேர்தல் மற்றும் அரசியல் சூழல் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய விவரங்கள்:

அதிகார ஆட்டம் எல்லை மீறல்: தாராபுரம் தொகுதி தற்போது ஜனநாய கம் துகிலுரி யப்படும் களமாக மாறி விட்ட தாகவும், அங்கு நிலவும் அதிகார அத்து மீறல்கள் அனைத்து எல்லைகளையும் தாண்டி விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பொருட்கள் மற்றும் கடைகள் சுருட்டல்: தெருவோரத்தில் உள்ள சாதாரண இள நீர்க் கடைகள் கூட அச்சுறுத் தப்பட்டு சுருட்டப் பட்டு விட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.   பொதுமக்களைக் காக்க வேண்டிய காவல் துறையின் தடியடிகள் பொதுமக்கள் மீது மிரட்டல் விடுக்கும் வகையில் காலனித் துவ முறைப்படி செயல்படுவதாக வேதனை தெரிவித்துள்ளார். உள்ளூர் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு அச்சத்தில் உறைந்து கிடக்கும் நிலையில், வெளியூரிலிருந்து பல நபர்களை வேன்களில் கொண்டு வந்து இறக்கி கலவரச் சூழல் உருவாக்கப்படுவதாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.  “அதி காரம் என்பது ஜன நாயகத்தைக் காப்பாற்றவா? காவு கொள்ளவா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தாராபுரத்தில் நிலவும் இந்தச் சூழல் குறித்து உரிய விசாரணை நடத்தி, அங்கு ஜனநாயகத்தை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்த அறிக்கை வலுவாக முன் வைக்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *