இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் வெளியிட்ட இந்திய கடற்படை மாலுமி கைது!

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

கோவை. அக். 5-  பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் உளவுத்துறை அதிகாரிக்கு, ரகசியத் தகவலை கசியவிட்டதாக இந்திய கடற்படை மாலுமி கோவையில் கைது செய்யப்பட்டார்.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் முகர்ஜி (31), இந்தியக் கடற்படையில் விசாகப்பட்டினத்தை தளமாகக் கொண்ட கிழக்கு கடற்படையில் மாலுமியாகப் பணியாற்றி வருகிறார்.

கோவை ரெட்ஃபீல்ட் பகுதியில் உள்ள இந்திய கடற்படை பயிற்சி மய்யமான ஐஎன்எஸ் அக்ரானியில் நடைபெறும் மேலாண்மை மேம்பாட்டுப் பயிற்சி முகாமில் கடந்த ஒரு வாரமாக தங்கி பிரதீப் முகர்ஜி பயிற்சி பெற்றார்.

இந்நிலையில், ஆந்திர காவல் துறையில் பயங்கரவாதக் குழுக்கள், எல்லை தாண்டிய உளவு மற்றும் உயர் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை விசாரிக்கும் சிறப்பு உளவுப் பிரிவு காவல் துறையினர் இரு நாட்களுக்கு முன் கோவைக்கு வந்து இவரை கைது செய்தனர்.

இது தொடர்பாக காவல் துறையினர் கூறியதாவது:

பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் உளவுத் துறை அதிகாரிக்கு, இந்திய கடற்படையின் ரகசிய பாது காப்புத் தகவல்களை பிரதீப் முகர்ஜி கசிய விட்டிருப்பது சிறப்பு உளவு பிரிவினருக்கு முதல்கட்டமாக தெரியவந்துள்ளது.

மேலும், சமூக ஊடகங்களில் பாகிஸ்தானிய பெண் உளவாளி யிடம், விசாகப்பட்டினம் கடற் படைத் தளத்துடன் தொடர்புடைய தகவல்களை பகிர்ந்ததும் உறுதிப் படுத்தப்பட்டது. இதையடுத்து, ஆந்திர சிறப்பு பிரிவு காவல் துறையினர், பிரதீப் முகர்ஜிகுறித்த தகவல்களை தெரிவித்து கைது செய்ய இந்திய கடற்படை அதிகாரிகளிடம் அனுமதி பெற்றனர்.

தொடர்ந்து, ஆந்திராவில் இருந்து கோவைக்கு வந்த சிறப்புக் குழு, பிரதீப் முகர்ஜியை கைது செய்தனர். அவரை கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, விஜயவாடாவுக்கு அழைத்துச் சென்றனர். இவ்வாறு காவல் துறையினர் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *