உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் அவர்களின் இளைய மகனும், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வந்தவருமான மாணிக்கம் நெடுமாறன் (வயது 57) உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்திரேலியாவிலேயே அக்டோபர் 1 அன்று மறைவுற்றார். செய்தி அறிந்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், பழ.நெடுமாறன் அவர்களுக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, அவரது மகன் மறைவுக்கு இரங்கலும், ஆறுதலும் தெரிவித்தார்.
