சேலம், அக.4- 20-09-2026 அன்று காலை 7:00 மணி அளவில் அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 148-ஆம் பிறந்த நாளை முன்னிட்டு அன்னை நாகம்மையார் சொந்த ஊரான சேலம் தாதம்பட்டி (பிரிவு சாலை)யில் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன் மற்றும் கழக மாநில மகளிர் அணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி கொடி அசைத்து சமூக நீதி மற்றும் சமத்துவத்துக்கான ‘பெரியார் நடை’ யை தொடங்கி வைத்தார்கள்.
பெரியார் நடை சேலம் தாதம்பட்டி பிரிவு சாலையில் தொடங்கி வீராணம் முதன்மைச் சாலை வழியாக தாதம்பட்டி ஏரியைச் சுற்றி வந்து மன்னார் பாளையம் பிரிவு சாலையில் நிறைவு பெற்றது.
நிகழ்ச்சிக்கு சேலம் மாவட்டத் தலைவர் வீரமணி ராஜூ, மாவட்டச் செயலாளர் மூனாங் கரடு பெ.சரவணன், மாவட்டத் துணைத் தலைவர் சு.இமயவரம்பன், மாவட்டத் தலைவர் ப.க. வழக்குரைஞர் வேல்.சோ.அசோகன், மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் ச.சுரேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர் க.கமலம், மாவட்டத் துணைச் செயலாளர் ப.க. மோ.தங்கராஜ், ‘மூளை நரம்பியல்’ மற்றும் பல துறை மருத்துவமனையின் செந்தில் மருத்துவக் குழுவினர் ஆம்புலன்சுடன் உடன் கலந்து கொண்டனர்.
75 தோழர்கள் கலந்து கொண்டுச் சிறப்பித்தனர். கலந்து கொண்டோர் அனைவருக்கும் பெரியார் இனிப்பும் காலைச் சிற்றுண்டியும் வழங்கப்பட்டன.
