பூதலூர் ஒன்றியத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்ட 148ஆவது பிறந்த நாள் விழா

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

பூதலூர், அக். 4- பூதலூர் ஒன்றியம் முழுதும் செப்டம்பர் 17 அன்று தந்தை பெரியார் பிறந்த நாள் விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அகரப்பேட்டை, பழமார் நேரி, திருக்காட்டுப் பள்ளி, மல்லைகுடி, பூதலூர், ஆவா ரம்பட்டி, செங் கிப்பட்டி, சமத்துவபுரம் ஆகிய ஊர்களில் தந்தை பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்தும், தெருமுறை கூட்டங்கள் நடத்தியும் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் ஒன்றிய கழகத் தலைவர் மா.வீரமணி, ஒன்றிய செயலாளர் இரா.பாலு, துணை தலைவர் இரெ.புகழேந்தி, துணை செயலாளர் பா.விஜயகுமார், தி.கா.பள்ளி நகர தலைவர் ம.குமார், அண்ணாச்சாமி, சிங்காரம், அ.கருணாநிதி, அருமை நாகராசன், மகளிரணி தோழியர் வி.சுசீலா, திமுக ஒன்றிய செயலாளர் கல்லணை செல்லக்கண்ணு, திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி தலைவர் மெய்யழகன், நகர திமுக செயலாளர் ஜெயராமன், சிவா, கண்ணன், விண்ண மங்கலம் நடராசன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.
பொதுக்குழு உறுப் பினர் மூ.சேகர், கழக சொற்பொழிவாளர் வீ.கலைவாணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். அனைத்து இடங்களிலும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. விசயகுமார், சுசீலா ஆகியோர் அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *