கழகக் களத்தில்…!

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

4.10.2026 ஞாயிற்றுக்கிழமை
கருநாடக மாநில தி.மு.க.
மேனாள் மாணவரணி அமைப்பாளர்
குப்பு.கைவல்யம் நினைவேந்தல் – படத்திறப்பு

பெங்களூரு: காலை 11 மணி *இடம்: கில்பர்ட்ஸ் வட்டம், சாம்பியன் அஞ்சல், தங்கவயல், பெங்களூரு *வரவேற்பு: குப்பு.அறிவழகன் (தங்கவயல், திமுக) *தலைமை: வழக்குரைஞர் தி.கிள்ளிவளவன் *படத்திறப்பு: மருத்துவர் சம்பத்குமார் *முன்னிலை: இரா.முனிசாமி, ஜெயராமன் *நினைவேந்தல் உரை: சு.கலையரசன், நாத்திகம் சிறீதர், சீ.சந்திரசேகரன், ஆரோக்கியதாஸ், பொன்.சாரங்கபாணி *சிறப்புரை: வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநிலச் செயலாளர், திராவிட மகளிர் பாசறை) *நல உதவி வழங்குதல்: த.கை.பொற்செழியன், எ.சு.பாலபோதி, வளர்மதி, த.கை.இளங்கதிரவன், மோனிஷா *நன்றியுரை: குப்பு.ஆதித்தன்.

தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு
கன்னியாகுமரியில் சமூக நீதி சமத்துவத்திற்கான பெரியார் நடை

கன்னியாகுமரி: காலை 9:00 மணி  *தொடங்கும் இடம்: கன்னியாகுமரி அறிஞர் அண்ணா சிலை முன்பாக  * பெரியார் பற்றாளர்கள் கழக தோழர்கள் நடைபயிற்சி நண்பர்கள் சமூக நீதி சிந்தனையாளர்கள் அனைவரும் பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கின்றோம். * கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் – கன்னியாகுமரி நகர திராவிடர் கழகம்.

5.10.2026 திங்கள்கிழமை
தந்தை பெரியார் 148ஆம் பிறந்த நாள் விழா

மயிலாடுதுறை: மாலை 6 மணி *இடம்: வருவாய்த் துறை அலுவலர் சங்க அரங்கம், சின்ன கடைவீதி, மயிலாடுதுறை *வரவேற்புரை: இரெ.செல்லதுரை (பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர்) *தலைமை: கடவாசல் குணசேகரன் (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: சீனிமுத்து, பூசி.காமராஜ், சா.ஜெகதீசன்  *பெரியார் பாடல்கள்: க.அருள்தாஸ் (மாவட்ட கழக இளைஞரணிச் செயலாளர்) *பெரியார் படத்திறப்பு: கு.இளமாறன் (மாவட்ட கழகச் செயலாளர்) *தொடக்கவுரை: ஞான.வள்ளுவன் (பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற துணைத் தலைவர்) *சிறப்புரை: பேராசிரியர் த.ஜெயராமன் (தமிழ்மண் தன்னுரிமை இயக்கம்) *ஒருங்கிணைப்பு: கி.தளபதிராஜ் (பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *நன்றியுரை: தங்க.செல்வராஜ் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *