நான்கு ஆண்டுகளில் போக்குவரத்து விதிமீறல் அபராதச் சீட்டுகள் இரு மடங்கு உயர்வு!

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

புதுடில்லி, அக்.03 போக்கு வரத்து விதிமீறல்களுக்காக வழங்கப்பட்ட சலான்களின் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் இரு மடங்கு உயர்ந்துள்ள அதே வேளையில், செலுத்தப்படாத நிலுவைத் தொகைகளும் கணிச மாக அதிகரித்துள்ளது.

போக்குவரத்து விதிமீறல்களை மின்னணு முறையில் அமல் படுத்துவது மற்றும் செலுத்தப் படாத போக்குவரத்து ‘இ-சலான்’ அபராதங்களை வசூலிப்பது தொடர்பான மனுவை உச்ச நீதி மன்றம் அண்மையில் விசாரித்தது.

அப்போது, ‘இ-சலான்’களை வழங்குவதை விட அவற்றின் மூலம் விதிக்கப்பட்ட அபராதத் தொகையை வசூலிப்பதே உண்மையான சவால் என்று குறிப்பிட்ட நீதிமன்றம், போக் குவரத்து விதிகளை மீறுபர்களுக்கு ‘இ-சலான்’ மூலம் விதிக்கப் படும் அபராதங்களை மின் கட்டணத் துடன் இணைத்து வசூலிக்கலாம் என பரிந்துரை செய்தது.

இந்தப் பரிந்துரை ஒரு விவா தத்தைத் தூண்டியுள்ளதுடன், நாடு முழுவதும் அதிகரித்து வரும் தீர்க்கப்படாத போக்குவரத்து விதிமீறல்களின் எண்ணிக்கை மீது புதிய கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த வகையில், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச் சகத்தின்படி, போக்குவரத்து விதிமீறல்களுக்காக வழங்கப்பட்ட சலான்களின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் இரட்டிப் பாகி உள்ளது.

அதன்படி, போக்குவரத்து சலான்களின் எண்ணிக்கை 2021-இல் 4.2 கோடியிலிருந்து 2025-இல் 9.6 கோடியாக அதி கரித்தது. 2026-ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் இந்த எண்ணிக்கை 7.8 கோடியை எட்டியது. அபராதங்களின் எண் ணிக்கை அதிகரிக்கும்போது, செலுத்தப்படாத நிலுவைத் தொகைகளும் அதிகரிக்கின்றன.

செலுத்தப்படாத சலான்களின் பங்கு, கடந்த பல ஆண்டுகளாக சீராகவும் கடுமையாகவும் அதிகரித்து வந்துள்ளது. 2022-ம் ஆண்டில் வழங்கப்பட்ட மொத்த சலான்களில் கிட்டத்தட்ட 48% நிலுவையில் இருந்தன. இந்த விகிதம் 2023-இல் 55%, 2024-இல் 63%, 2025-இல் 70%, 2026-இல் 82 சதவீதமாகவும் உயர்ந்தது.

அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் சுமார் 9 கோடி போக்குவரத்து சலான்கள் வழங்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து தெலங்கானாவில் 8.2 கோடியும், கேரளாவில் 4.7 கோடியும், அரியானாவில் 2.4 கோடியும் வழங்கப்பட்டுள்ளன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *