பழங்குடியினர், தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை குறிவைத்து மதமாற்றம் தொடர்பாக ஆய்வு செய்யும் ஒன்றிய அரசு

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

மாநில அரசுகள் அதிர்ச்சி

புதுடில்லி, அக்.3  நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 15 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மத ரீதியிலான மக்கள்தொகை மாற்றங்கள் குறித்த விரிவான தகவல்களை அனைத்து மாநி லங்கள் மற்றும் யூனியன் பிர தேசங்களிடம் ஒன்றிய உள்துறை அமைச்சகம் கோரியுள்ளது.

ஓய்வுபெற்ற நீதிபதி பிர காஷ் பிரபாகர் நவ்லேகர் தலை மையிலான உயர் நிலைக் குழு, சட்டவிரோதக் குடியேற்றம் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் மக்கள்தொகை மாற் றங்களை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து, தேவையான கொள்கை, சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை அரசுக்குப் பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு மாநில அரசுகளிடம் கேட்டுள்ள முக்கிய விவரங்கள்:

மாவட்டங்கள், தொழில்துறை பகுதிகள் மற்றும் எல்லையோர மாவட்டங்களில் கடந்த 15 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள ஆண்டு வாரியான மத அடிப் படையிலான மாற்றங்கள் மற்றும் 2011-க்குப் பிறகு பழங்குடியினரின் மதவாரியான தரவுகள்.

பிறப்புப் பதிவுகள், 21 நாட் களுக்குப் பிந்தைய தாமதமான பதிவுகள், சந்தேகத்திற்குரிய முறைகேடு வழக்குகள் மற்றும் மருத்துவமனை சார்ந்த/சாராத பிரசவ விவரங்கள்.

மத வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான ஆய்வுகள்; வாக்கா ளர் அட்டை, ரேசன் அட்டை மற்றும் பிற அடையாளப் பதிவு களில் ஏற்பட்டுள்ள திடீர் அதிகரிப்புகள்.

எல்லையோர மாவட்டங் களில் வாகனப் பதிவுகள், வர்த்தக உரிமங்களின் திடீர் உயர்வு; பழங்குடியின நிலங்களின் சட்டவிரோதப் பரிமாற்றம் மற்றும் ஆக்கிரமிப்புகள்.

பழங்குடியினப் பகுதிகளில் கடந்த 15 ஆண்டுகளில் தொடங் கப்பட்ட அரசு, தனியார் மற்றும் மத அடிப்படையிலான கல்வி நிறுவனங்களின் தகவல்கள்.

சட்டவிரோதக் குடியேற்றம்: சட்டவிரோதமாகக் குடியேறிய வர்களைக் கண்டறிய உள்ளூர் நிர்வாகம் பயன்படுத்தும் உளவுத்துறை மற்றும் சமூக நடைமுறைகள்.

வழக்கமாக மாநில அரசு களால் மத அடிப்படையில் இதுபோன்ற விரிவான தரவுகள் சேகரிக்கப்படுவதில்லை என்ப தால் இந்நடவடிக்கை மாநில அரசுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இத்தரவு சேகரிப்பு தற்போது ஆரம்பகட்டத்திலேயே இருப்ப தாகவும், அரசுப் பதிவேடுகளில் இல்லாத தகவல்களை வழங்குமாறு மாநிலங்கள் கட்டாயப்படுத்தப்பட மாட்டாது என்றும் உயர் நிலைக் குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *