காலையில் உத்தரவு வருகிறது! மாலையில் ரத்தாகிறது!
யார் உத்தரவு போட்டது? யார் அதை ரத்து செய்தது?
நடப்பது ஆட்சியா? இல்லை, வெறும் காட்சியா?
யார் உத்தரவு போட்டது? யார் அதை ரத்து செய்தது?
நடப்பது ஆட்சியா? இல்லை, வெறும் காட்சியா?
தாராபுரம் செப். 30 “மாற்றம் மாற்றம் என்று ஆட்சிக்கு வந்தவர்கள் ஏமாற்றத்தைத்தான் தந்திருக்கிறார்கள்” என்பதை அம்பலப்படுத்திப் பேசும் போது, “தமிழ்நாடு அரசு சார்பில் காலையில் உத்தரவு வருகிறது! அதே உத்தரவு மாலையில் ரத்தாகிறது ஏன்? உத்தரவு போட்டது யார்? அதை ரத்து செய்தது யார்? நடப்பது ஆட்சியா? இல்லை வெறும் காட்சியா? இல்லை இரட்டை ஆட்சி நடக்கிறதா?” என்று, தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பரப்புரையில் ஈடுபட்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
- காலையில் உத்தரவு வருகிறது! மாலையில் ரத்தாகிறது! யார் உத்தரவு போட்டது? யார் அதை ரத்து செய்தது? நடப்பது ஆட்சியா? இல்லை, வெறும் காட்சியா?
- தாராபுரம் தி.மு.க. வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து மூலனூர் வடுகப்பட்டிப் பிரிவில் தமிழர் தலைவர் பிரச்சாரம்
- மேனாள் அமைச்சர்கள்
- கழகத் தலைவர் தேர்தல் பரப்புரை
- பாசிசத்தை பாயாசத்தில் ஊற்றிக்கொடுக்கும் ஆட்சி!
- கலைஞர் போல் வழிகாட்டுகிறீர்கள்!
தாராபுரம் தி.மு.க. வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து மூலனூர் வடுகப்பட்டிப் பிரிவில்
தமிழர் தலைவர் பிரச்சாரம்
தமிழர் தலைவர் பிரச்சாரம்
தாராபுரம் திராவிடர் கழக மாவட்டம் சார்பில், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் வழக்குரைஞர்
எஸ்.சுகன்யா அவர்களை ஆதரித்து, நேற்று (29.09.2026) மாலை 5 மணிக்கு, மூலனூர் வடுகப்பட்டிப் பிரிவில் தேர்தல் பரப்புரைக்கூட்டம் ஏற்பட்டு செய்யப்பட்டிருந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஈரோடு த.சண்முகம், மாநில வழக்குரைஞர் அணிச் செயலாளர் மு.சென்னியப்பன் ஆகியோர் ஒருங்கிணைப்பில், மாவட்டச் செயலாளர் ஜெ.தம்பிபிரபாகரன் தலைமையேற்றும், பொதுக்குழு உறுப்பினர் நா.சக்திவேல் அனைவரையும் வரவேற்றும் சிறப்பித்தனர்.
மாவட்டக் காப்பாளர் கே.என்.புள்ளியான், மாவட்ட துணைத் தலைவர்கள் ச.ஆறுமுகம், நா.மாயவன், பொதுக்குழு உறுப்பினர் கி.மயில்சாமி, பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் தி.வெங்கடாசலம், செயலாளர் பு.முருகேசு, மாவட்ட திராவிடர் தொழிலாளரணி தலைவர் மா.சிவக்குமார், ஒன்றியச் செயலாளர் ச.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர்.
கழகத் தலைவர் நிகழ்விடத்துக்குச் சரியான நேரத்துக்கு வருகை தந்தார். அப்போது, கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி உரையாற்றிக் கொண்டிருந்தார். கழகத் தலைவர் வருகையை முன்னிட்டு தனது உரையை நிறைவு செய்தவாறு, அடுத்த கூட்ட நிகழ்விடமான தாராபுரம் அண்ணா சிலைக்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்திற்கு மாவட்டக் கழகத் தோழர்களின் வழிகாட்டுதலில் சென்றார்.
மேனாள் அமைச்சர்கள்
அதைத் தொடர்ந்து, மேனாள் செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் வெள்ளக்கோவில் மு.பெ.சாமிநாதன் தொடக்கவுரை ஆற்றினார். தி.மு.க. முதன்மைச் செயலாளர், மேனாள் நகர்புறத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மேனாள் அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மேனாள் ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், ஈரோடு தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் பிரகாஷ், தி.மு.க.மாவட்டச் செயலாளர் இல.பத்மநாபன், ஈரோடு அனிச்சம் கனிமொழி, திருப்பூர் மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிறைவாக கழகத் தலைவர் சிறப்புரை ஆற்றினார்.
கழகத் தலைவர் தேர்தல் பரப்புரை
அவர் தமது உரையில், “இந்த இடைத்தேர்தல் ஏன் வந்தது? இது இயல்பான இடைத்தேர்தலா?” என்று மக்களிடம் கேள்விகள் கேட்டு, “இது திணிக்கப்பட்ட இடைத்தேர்தல். மாற்றம் மாற்றம் என்று சொன்னார்களே, அடுத்த கட்சியிலிருந்து தன் கட்சிக்கு மாறுவதைத்தான் மாற்றம் என்று சொன்னார்களா?” இந்த குதிரை பேரம் பொது ஒழுக்கத்துக்கும், ஜனநாயகத்துக்கும் உகந்ததா?” என்று, எடுத்த எடுப்பிலேயே மக்களின் பலத்த கைதட்டல்களுக்கிடையே த.வெ.க. அரசின் மீது நேரிடையாகத் தாக்குதலைத் தொடுத்தார்.
தொடர்ந்து, “இப்படிப்பட்டவர்களுக்குத் தண்டனை தரவேண்டாமா?” என்றொரு கேள்வியைக் கேட்டு, “அந்தத் தண்டனை என்பது ஜனநாயக ரீதியிலான தேர்தல் தோல்விதான்” என்று பதிலையும் சொன்னார். மக்கள் அதை ஆதரிப்பதைப் போல கையொலி செய்தனர். ஆசிரியர் அத்துடன் விடவில்லை. “தாவிக்கொண்டே இருப்பவர்களுக்கு வாக்களிக்கப் போகிறீர்களா? இல்லை சாதனை செய்கிறவர்களுக்கு வாக்களிக்கப் போகிறீர்களா?” என்ற அதிரடியான கேள்வியை முன் வைத்தார்.
மேலும் அவர், “கஜானாவைக் காலி செய்துவிட்டார்கள் என்று பிரச்சாரம் செய்தவர்கள், ரூபாய் 20,000 கோடி கடன் வாங்கியது எதற்காக? ஜோதிடர் பேச்சைக் கேட்டு, கடற்கரையைப் பார்க்கும்படியாக முதலமைச்சர் அலுவலக அறையை ரூ.4 கோடி செலவில் புதுப்பித்தது ஏன்?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தார்.
பாசிசத்தை பாயாசத்தில்
ஊற்றிக்கொடுக்கும் ஆட்சி!
ஊற்றிக்கொடுக்கும் ஆட்சி!
தொடர்ந்து, “சட்டம்– ஒழுங்கு பற்றிக் கேள்வி கேட்டால், ‘பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்கு விலை இவ்வளவு’ என்று பதில் சொல்வது ஏன்?” என்று கேட்டுவிட்டு, “நாக்கில் நரம்பில்லாமல், போக்கில் பொறுப்பில்லாமல்
கலைஞர் போல் வழிகாட்டுகிறீர்கள்!
தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரைக்காக, கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மூலனூர் மற்றும் தாராபுரம் அண்ணா சிலை ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுகோள் விடுத்து பரப்புரை செய்தார். பரப்புரையின் இறுதியில், உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டுகோள் வைப்பதின் உண்மைத்தன்மையை மக்களுக்கு விளக்குவதற்காக, பேச்சின் இறுதியில், “இன்னும் இரண்டு மாதம் வந்தால் எனக்கு 94 வயதாகிறது” என்று சொல்லி முடிப்பதற்குள் மக்கள், ஆவாரத்துடன் வியப்புடன் கைதட்டி மகிழ்ந்தனர்.
குறிப்பாக பெண்கள் நெகிழ்ந்தனர். “இந்த வயதில் எனக்கிருக்கும் உடல் நலக்கோளாறுகளுக்கு மத்தியில் ஏன் இப்படி அலைந்து திரிந்து உங்களிடம் உதயசூரியனுக்கு வாக்குச் சேகரிக்க வந்திருக்கிறேன். ஏனென்றால், நீங்கள் ஏமாந்துவிடக்கூடாது. தமிழ்நாடு வளம் பெற வேண்டும். ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும். ஆகவே, உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்” என்று வேண்டுகோள் வைத்து நிறைவு செய்தார்.
திராவிடர் இயக்கத்தின் முதிர்ந்த தலைவர் வைக்கும் வேண்டுகோளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இதையே பரப்புரை முடிந்ததும், தி.மு.கழகத்தின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அவர்கள், “எங்களைப் பொறுத்தவரையில், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் இல்லாத இடத்தை நீங்கள் நிரப்புகிறீர்கள். முத்தமிழறிஞர் கலைஞர் போல் எங்களுக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் வயதையும் பொருட்படுத்தாமல் நீங்கள் வந்து பிரச்சாரம் செய்தது, மக்கள் மத்தியில் நல்ல மதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம் என்பதில் அய்யமில்லை” என்று கழகத் தலைவரிடம் சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது.
(தாராபுரம் அண்ணாசிலை, 29.09.2026)
