மாதந்தோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் முதியோர் உதவித் தொகைகள் மக்களைச் சென்றடைகின்றன. ஆனால், இந்த மாதம் உரிய காலத்தில் உதவித் தொகைகள் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு சென்னை முதல் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங் களிலிருந்தும் எழுந்துள்ளது.
தள்ளாத வயதில் அரசின் இந்த உதவித் தொகை பல வகையிலும் முதியோருக்குப் பயன்படுகிறது. அதைப் பெறுவதற்கு அவர்கள் அலைவதும், வந்து போவதற்கே போக்குவரத்துக்குச் செலவு செய்வதும் அவலமாக உள்ளது.
தமிழ்நாடு அரசு மனிதநேய உணர்வுடன் உடனடியாக இப் பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும்!
முதியோர் உதவித் தொகைகள் தாமதமாவது ஏன்? தமிழ்நாடு அரசு முதியோரை அலைக்கழிக்கலாமா?
Leave a Comment
