கழகக் களத்தில்…!

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

2.10.2026 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண் : 219

மாலை 6.30 மணி முதல் 8 வரை*தலைமை: ச.பால்ராஜ் (தலைவர்) * வரவேற்புரை:  ஆ.அறிவுச்சுடர் (மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளர்) * முன்னிலை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்) * ஒருங்கிணைப்பு:  பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) *நூல்:  ஆசிரியர் கி.வீரமணி  அவர்களின் ‘காமராசர் கொலை முயற்சி சரித்திரம்’  *நூல் மதிப்புரை: பேராசிரியர் முனைவர் காஞ்சி பா.கதிரவன்  *நன்றியுரை: மாரி.கருணாநிதி (மாநிலச்செயலாளர், பகுத்தறிவு கலைத்துறை) * Zoom: 82311400757 Passcode : PERIYAR.

Contents

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கொள்கைக் குடும்பங்கள் கூடுகை விழா

கும்பகோணம்: காலை 8 மணி முதல் மாலை 4.30 மணி வரை *இடம்: ஏ.எம். மகால், மோதிலால் தெரு, கும்பகோணம் *நிகழ்ச்சிகள்: குடந்தை ஜோசப் நவநீதனின் கிழவனல்ல!… அவன் கிழக்கு திசை!! பாடல், ஈட்டி கணேசனின் மந்திரமா? தந்திரமா?, குடும்பங்கள் அறிமுகம், அவர் தாம் பெரியார் – பெரியார் பிஞ்சுகளின் குரல், பகுத்தறிவு ஆடல் பாடல், இயக்கமும் குடும்பமும், கொள்கைத் தலைவர் பெரியார்! குடும்பத் தலைவர் ஆசிரியர்!!, விளையாட்டுப் போட்டி, நகைச்சுவைத் தென்றல் இராம.அன்பழகனின் பகுத்தறிவுப் பாட்டு மன்றம் *சிறப்பு விருந்தினர்கள்: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), சாக்கோட்டை க.அன்பழகன் (திமுக), கவிஞர் கீதாலயன், சுப.தமிழழகன் *நுழைவுக் கட்டணம்: ரூ.100 *ஏற்பாடு: கும்பகோணம் (கழக) மாவட்ட, மாநகர திராவிடர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை.

3.10.2026 சனிக்கிழமை
தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம்
34ஆம் சிறப்புக் கூட்டம்

தாம்பரம்: மாலை 6 மணி *இடம்: பெரியார் புத்தக விற்பனை நிலையம், தாம்பரம் *தலைப்பு: தமிழர் அறநெறி வாழ்வு *சிறப்புரை: மா.சமத்துவமணி (காப்பாளர், திராவிடர் கழகம் செங்கற்பட்டு) *தலைமை: ஆதிமாறன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், தி.மு.க.) *செயலாளர்: துரை மணிவரண்ணன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், ம.தி.மு.க.) *ஒருங்கிணைப்பு: கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம்).

4.10.2026 ஞாயிற்றுக்கிழமை
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா ஆண்டிபட்டி தந்தை பெரியார் குருதிக் கொடை கழகம், ஆண்டிபட்டி நோபிள் டோனர்ஸ் கிளப் மற்றும் மதுரை ரெட் கிராஸ் இணைந்து நடத்தும் குருதிக் கொடை முகாம்

ஆண்டிபட்டி: காலை 9 மணி *இடம்: ஆர்ய வைஸ்ய மண்டபம், கடைவீதி, ஆண்டிபட்டி, தேனி *தலைமை: தங்க தமிழ்ச்செல்வன் (தேனி நாடாளுமன்ற உறுப்பினர்) *முன்னிலை: ஆ.மகாராசன் (ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர்), முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), ச.இரகுநாகநாதன் (காப்பாளர்), ம.சுருளிராசு (தேனி மாவட்டக் கழகத் தலைவர்), பூ.மணிகண்டன் (மாவட்டச் செயலாளர்)  *முகாமை தொடங்கி வைப்பவர்: தி.நாகராஜன் (மேயர் (பொ), மதுரை மாநகராட்சி) *வரவேற்புரை: செ.கண்ணன் *அழைப்பு: ஸ்டார் இனிப்பகம் மற்றும் ஸ்டார் அறக்கட்டளை, ஆண்டிபட்டி.

பெரியார் பிறந்த நாள் விழா
வடலூரில் சமூக நீதி – சமத்துவத்திற்கான பெரியார் நடை

வடலூர்: காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை *இடம்: பேருந்து நிலையம் தொடங்கி தமிழ்நாடு மெடிக்கல் வரை சென்று அய்யனேரி நடைபாதையில் பயணித்து மீண்டும் பேருந்து நிலையம் அடைதல் *குறிப்பு: கழகத் தோழர்களும், பெரியார் பற்றாளர்களும், நடைப்பயிற்சி நண்பர்களும் அவசியம் பங்கேற்க வேண்டுகிறோம் *ஏற்பாடு: திராவிடர் கழகம், கடலூர் மாவட்டம்.

தருமபுரி மாவட்ட கழகத்தின் சார்பில்
கழகக் குடும்பங்கள் சந்திப்பு விழா

பழைய தருமபுரி: காலை 11 மணி *இடம்: பெ.கோவிந்தராஜ் இல்லம், பழைய தருமபுரி *தலைமை: வழக்குரைஞர் பீம.தமிழ்பிரபாகரன் (மாவட்டக் கழகத் தலைவர்) *வரவேற்புரை: மா.முனியப்பன் (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: கே.ஆர்.சி.ஆசைத்தம்பி (காப்பாளர்), அ.தீர்த்தகிரி (காப்பாளர்) *நிகழ்ச்சி நிரல்:  கொடி ஏற்றி இனிப்பு வழங்கல், மந்திரமா? தந்திரமா?. அறிஞர்களின் பார்வையில் தந்தை பெரியார், சிறுவர்களுக்கான ஓவியப் போட்டி – கலை நிகழ்ச்சிகள், திராவிட இயக்க தலைவர்கள் படத்திறப்பு, புரட்சிக் கவிஞரின் எழுச்சி வரிகள், கலந்துரையாடல் நிகழ்வு *சிறுவர்களுக்கான போட்டிகள் ஒருங்கிணைப்பு: தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணிச் செயலாளர்), பெ.கோகிலா (மாவட்ட மகளிர் பாசறைச் செயலாளர்), ச.மணிமொழி (மாநில துணை செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *கருத்துரை: சி.எஸ்.சபரி, எம்.ஜி.சங்கர், சா.ராஜேந்திரன், மாரி கருணாநிதி, மா.செல்லதுரை *சிறப்புரை: ஊ.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), பி.கே.ஆர்.கவுதமன் (இயக்குநர், பெரியார் மணியம்மை மருத்துவக் குழுமம்) *நன்றியுரை: தே.சத்தியராஜ்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *