மதுரையில் முதலமைச்சர் விஜய் நிகழ்ச்சி வெயில் தாக்கத்தால் 15-க்கும் மேற்பட்டோர் மயக்கம்!

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

மதுரை, செப்.29- மதுரையில் முதலமைச்சர் விஜய் நிகழ்ச்சியில் வெய்யிலில் நின்றதாலும், அவர் வரும்போது தள்ளு முள்ளு ஏற்பட்டதாலும் 15- க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதலமைச்சர் விஜய் நேற்று (28.9.2026) தொடக்கிவைத்தார்.

இதனால் அரசு மருத்துவமனை முன்பு ஏராளமான, அக்கட்சியினைச் சேர்ந்த தொண்டர்கள் குவிந்திருந்தனர்.

நேற்று மதுரையில் கடுமையான வெய்யில் காரணமாகவும், மூன்று மணி நேரமாக அவர்கள் வெய்யிலில் பேரிக்காடுக்கு உள்ளே அடைத்து வைக்கப்பட்டிருந்ததால் தண்ணீர் இன்றி தவித்தனர்.

இறுதியில் முதலமைச்சர் விஜய் மருத்துவமனைக்கு உள்ளே சென்றதும் 15 -க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து மயங்கி விழத் தொடங்கினர். அவர்களை காவல்துறையினர் ஒவ்வொருவராக தூக்கிச் சென்று மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

பெண்கள், சிறுவர்கள், வயதானவர்கள் என அனைவரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். மேலும் முதலமைச்சர் பாதுகாப்பு வாகனங்கள் அனைத்தும் சாலையின் நடுவே, மருத்துவமனை முன்பாக நிறுத்தப்பட்டிருந்தன.

இதனால் மருத்துவ மனைக்கு அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. முதலமைச்சர் சென்ற பிறகு அனைவரும் தடுப்புகளில் ஏறி குதித்து தப்பித்து ஓடினர். முதலமைச்சர் விஜய் இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *