அய்ரோப்பிய பொறியியல் கழக உறுப்பினராக சென்னை அய்அய்டி பேராசிரியர் தேர்வு

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஆக. 15 – அய்ரோப்பிய பொறியியல் கழக முழுநேர உறுப்பி னராக சென்னை அய்அய்டி பேரா சிரியர் தாளப்பில் பிரதீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அய்ரோப்பிய பொறியியல் கழகம் சுவீடன் நாட்டில் உள்ள கோதெர்ன்பர்க் நகரை தலைமை யிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இதில் நோபல் பரிசு பெற்றவர்கள், கணினி உலகின் நோபல் பரிசு என அழைக்கப்படும் டூரிங் விருது பெற்றவர்கள் போன்றோர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

இந்நிலையில், உலக அளவில் சிறப்பு வாய்ந்த அய்ரோப்பிய பொறியியல் கழகத்தில் முழுநேர உறுப்பினராக சென்னை அய்அய்டி வேதியியல் துறை பேராசிரியர் தாளப்பில் பிரதீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

3 ஆவது இந்தியர்

பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தின் புகழ்பெற்ற விஞ்ஞானிகள் சிஎன்ஆர்.ராவ், பீமன் பக்சி ஆகியோருக்குப் பிறகு இந்தப் பதவிக்கு தேர்வு செய்யப்படும் 3 ஆவது இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் தாளப்பில் பிரதீப் நீர் சுத்திகரிப்பு மற்றும் நானோ டெக்னாலஜி துறையில் ஆற்றியுள்ள பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு இந்த கவுரவம் கிடைத்துள்ளது.

நானோ நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பம்

இந்தியாவில் லட்சக்கணக்கான மக்களுக்கு ஆர்சனிக், நச்சுகள் போன்ற மாசுபாடுகள் இல்லாத பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதற்கு அவர் கண்டுபிடித்த நானோ நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பம் காரணமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் பத்மசிறீ, ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியலில் சிறந்த கண்டுபிடிப்புகளுக்காக வழங்கப்படும் உலகளாவிய அறி வியல் பரிசான பன்னாட்டு எனி விருது உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *