
கடலூர், செப். 28- 27.9.2026 அன்று கடலூரில் தந்தை பெரியாரின் 148ஆம் பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி சமத்துவ பெரியார் நடை நிகழ்த்தப் பெற்றது. கடலூர் பெரியார் கலைக்கல்லூரியில் இருந்து துவங்கிய நடை வெள்ளி கடற்கரை வழியாக சுமார் இரண்டரை கிலோ மீட்டர் பயணித்து தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து நிறைவு பெற்றது.
பயணத்திற்கு திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமை தாங்கினார். கழக காப்பாளர் அரங்க .பன்னீர்செல்வம், மாவட்ட கழக தலைவர் சொ தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட இணைச் செயலாளர் நா.பஞ்சமூர்த்தி, மாவட்ட இளைஞரணி தலைவர் டிஜிட்டல். ராமநாதன், தந்தை பெரியார் வீர விளையாட்டு கழக தலைவர் மாணிக்கவேல், வடக்குத்து கழகத் தலைவர் பாஸ்கர், வடக்குத்து பாஸ்கரன், இடிமுழக்கம் இந்திரஜித், கடலூர் தமிழரசன், வழக்குரைஞர் வனராசு, மகளிரணி தமிழ்த்தென்றல் பெரியார் பிஞ்சுகள்,
திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் பணிக்குழு செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் இள.புகழேந்தி, கடலூர் மாநகர திமுக துணைச் செயலாளர் அகஸ்டின் பிரபாகரன், செல்வம், தீனா உள்ளிட்ட திமுக தோழர்களும் பெரியார் சிவா, திராவிட மகிழன் மக்கள் அதிகாரம் மாநில குழு தோழர் பாலு, மாநகர செயலாளர் ரவிச்சந்திரன், கடலூர் முத்தமிழ் சங்க தலைவர் கவிஞர் காரை பழ.ஆறுமுகம், கடலூர் மாவட்ட தமிழ் சங்கத்தின் குறிஞ்சி ரவி, ராம ஜெகதீசன், சிவக்குமரன் பகுத்தறிவாளர் கழக கவிஞர் ம.ரா.சிங்காரம், வ.ராமலிங்கம், வள்ளலார் சன்மார்க்க சங்க நிறுவனர் ராசதுரை ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தின் தோழர்கள் ஜெயராமன், அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மாநகர தலைவர் தென்.சிவக்குமார் மாவட்ட செயலாளர் க.எழிலேந்தி செய்திருந்தனர்.
