உரத்தநாட்டில் எழுச்சியுடன் நடைபெற்ற திராவிடர் கழக கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்

சிறப்பு புத்தக சலுகைகள்

உரத்தநாடு, ஆக. 16- உரத்தநாடு நகரம், வடக்கு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் 14-08-2026 அன்று மாலை 6.30 மணியளவில் உரத்த நாடு மன்னார்குடி முக்கத்தில் கழக கொள்கை விளக்க தெருமுனைக் கூடம் எழுச்சியுடன் நடைபெற்றது.

உரத்தநாடு நகர செயலாளர் பு. செந்தில்குமார் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

உரத்தநாடு நகரத்தலைவர் பேபி. ரெ.இரவிச்சந்திரன் தலைமையேற்று உரையாற்றினார்.

மாவட்ட துணைச்செயலாளர்  கருவிழிக்காடு ரெ.சுப்பிரமணியன், ஒக்கநாடு கீழையூர் ஓய்வு பெற்ற கிராமநிர்வாக அலுவலர் வெ.துரை, கண்ணைக்கிழக்கு பொறியாளர் அரங்க.குமரவேல், உரத்தநாடு வடக்குஒன்றிய துணைச்செயலாளர் கக்கரை.கோ. இராமமூர்த்தி,நகர இளைஞர் அணி செயலாளர் மா.சாக்ரட்டீஸ், வடக்குஒன்றிய இளைஞர் அணி துனைச்செயலாளர் இரா.இராஜதுரை, விடுதலை வாசகர் வட்ட செயலாளர் ஏ.வி.என்.குணசேகரன், திமுக 13 ஆவது வட்ட செயலாளர் ஷேக். முகமதுகனி, மேனாள் பேரூராட்சி மன்ற தலைவர் ஷேக்தாவூது, விடுதலை வாசகர் வட்ட துனைச் செயலாளர் விசுவநாதன், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் ஆகியோர் உரையாற்றினர்.

மாவட்டத்தலைவர் வழக்குரைஞர் சி. அமர்சிங், மாவட்ட செயலாளர் அ. அருணகிரி ஆகியோர் தொடக்கவுரையாற்றினர்.

கழக கழக பேச்சாளர் இராம. அன்பழகன் சிரப்புரையாற்றினார்.

நகர இளைஞர் அணி தலைவர் பெறியாளர் ச.பிரபாகரன் நன்றி கூறினார்.

திரளான பொதுமக்கள் கருத்துக்களை கேட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *