கடலூரில் சமூக நீதி மற்றும் சமத்துவத்துக்கான பெரியார் நடை…! (Periyar Walk)

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

திராவிடர் கழகம்

கடலூர், செப். 28- 27.9.2026 அன்று கடலூரில் தந்தை பெரியாரின் 148ஆம் பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி சமத்துவ பெரியார் நடை நிகழ்த்தப் பெற்றது. கடலூர் பெரியார் கலைக்கல்லூரியில் இருந்து துவங்கிய நடை வெள்ளி கடற்கரை வழியாக சுமார் இரண்டரை கிலோ மீட்டர் பயணித்து தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து நிறைவு பெற்றது.

பயணத்திற்கு திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமை தாங்கினார். கழக காப்பாளர் அரங்க .பன்னீர்செல்வம், மாவட்ட கழக தலைவர் சொ தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட இணைச் செயலாளர்  நா.பஞ்சமூர்த்தி, மாவட்ட இளைஞரணி தலைவர் டிஜிட்டல். ராமநாதன், தந்தை பெரியார் வீர விளையாட்டு கழக தலைவர் மாணிக்கவேல், வடக்குத்து கழகத் தலைவர் பாஸ்கர், வடக்குத்து பாஸ்கரன், இடிமுழக்கம் இந்திரஜித், கடலூர் தமிழரசன், வழக்குரைஞர் வனராசு, மகளிரணி தமிழ்த்தென்றல் பெரியார் பிஞ்சுகள்,

திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் பணிக்குழு செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் இள.புகழேந்தி, கடலூர் மாநகர திமுக துணைச் செயலாளர் அகஸ்டின் பிரபாகரன், செல்வம், தீனா உள்ளிட்ட திமுக தோழர்களும் பெரியார் சிவா, திராவிட மகிழன் மக்கள் அதிகாரம் மாநில குழு தோழர் பாலு, மாநகர செயலாளர் ரவிச்சந்திரன், கடலூர் முத்தமிழ் சங்க தலைவர் கவிஞர் காரை பழ.ஆறுமுகம், கடலூர் மாவட்ட தமிழ் சங்கத்தின் குறிஞ்சி ரவி, ராம ஜெகதீசன், சிவக்குமரன் பகுத்தறிவாளர் கழக  கவிஞர் ம.ரா.சிங்காரம், வ.ராமலிங்கம், வள்ளலார் சன்மார்க்க சங்க நிறுவனர் ராசதுரை ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தின் தோழர்கள் ஜெயராமன், அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மாநகர தலைவர் தென்.சிவக்குமார் மாவட்ட செயலாளர் க.எழிலேந்தி செய்திருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *