பிறந்த ஆண்டிலேயே பத்தாம் வகுப்பு முடித்தாரா, பா.ஜ.க. வேட்பாளர்?

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

கேலிக்கூத்து அரசியல்!

நந்திகிராம், செப்.27 மேற்கு வங்க சட்டமன்ற இடைத்தேர்தலில் நந்திகிராம் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளராகக் களமிறங்கியுள்ள ஹசிராணி ரத்  தாக்கல் செய்த பிர மாணப் பத்திரத்தில், தனது வயது 60 வயது என்று குறிப்பிட்டுள்ளார். அதே மனுவில், தான் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்டு 1965 என்று பதிவு செய்துள்ளார்.

ஒரு நபர் பிறந்த ஆண்டிலேயே அல்லது பிறப்பதற்கு முன்பே 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றது போன்ற இந்த விசித்திரப் பதிவு, அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் பெரும் கேலிக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாகி யுள்ளது.

எளிய மக்களின் வேட்பு மனுக்களில் சிறு எழுத்துப்பிழை இருந்தாலும் உடனடியாக நிராகரிக்கும் அல்லது தீவிர பரிசீலனை செய்யும் தேர்தல் ஆணையம், ஆளும் தரப்பு வேட்பாளரின் மனுவில் உள்ள இவ்வளவு பெரிய குளறுபடி யைக் கவனிக்காமல் எவ்வாறு ஏற்றுக்கொண்டது என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ளன.

இந்த விவகாரத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் அவசர மனுத் தாக்கல் செய்துள்ளது. ‘‘மனித உடலியல் மற்றும் சாமானிய விதிமுறைகளின்படி ஒரு குழந்தை பிறந்த ஆண்டிலேயே 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற முடியாது’’ என்று சுட்டிக்காட்டியுள்ள காங்கி ரஸ் கட்சி, ஹசிராணி ரத்தின் வேட்பு மனுவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், இதுகுறித்து தேர்தல் ஆணையம் விரிவான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது!

வேட்புமனுப் பரிசீலனை முடிந்து தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட் டுள்ள இந்த வழக்கு நந்திகிராம் இடைத்தேர்தலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *