பிரபலங்களுக்கு மட்டும் சிறப்புச் சலுகையா? சாதாரண வாக்காளர்களின் உரிமை கேள்விக்குறி டில்லி வாக்காளர் பட்டியல் திருத்த சர்ச்சை

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

புதுடில்லி, செப்.27 டில்லியில் தற்போது நடைபெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் போது (எஸ்.அய்.ஆர்.) ஆயிரக்கணக்கான சாதாரண மக்களின் பெயர்கள் நீக்கப்பட்டு வரும் நிலையில், முக்கியப் பிரபலங்களுக்கு மட்டும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் சென்று சரிபார்ப்பு நடத்தியிருப்பது பெரும் விவாதத்தையும் கொந் தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

“வாக்குரிமை என்பது அனைவருக்கும் சமமானது; ஒருவருக்கு ஒரு வாக்கு என்னும் கொள்கை என்னவானது? சாதாரண மக்களுக்கு மறுக்கப் படும் இத்தகைய சலுகை, பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட கோடிக்கணக்கான எளிய மக்களுக்குக் கிடைக்குமா?” என்ற கேள்வி சமூகத்திலும் அரசியல் தளத்திலும் வலுவாக எழுந்துள்ளது.

டில்லியில் 2002-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முந்தைய சிறப்புத் திருத்தப் பணியின் தரவுகளுடன் தற் போதைய கணக்கெடுப்பு படிவங்களை ஒப்பிட்டபோது, பல முக்கியப் பிரமுகர்களின் விவரங்களில் முரண்பாடுகள் இருப்பது தெரியவந்தது. இதற்காக அவர்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிக்கை அனுப்பப்பட்டிருந்தது.

விவரங்கள் பொருந்தாத
முக்கியப் பிரமுகர்கள்

எல்.கே. அத்வானி (பாஜக மூத்த தலைவர்) ஜக்தீப் தன்கர் (முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர்) எஸ். ஜெய்சங்கர் (வெளியுறவுத் துறை அமைச்சர்) ரேகா குப்தா (டில்லி முதலமைச்சர்) அரவிந்த் கெஜ்ரிவால் (முன்னாள் டில்லி முதலமைச்சர்) மற்றும் பல துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள்.

அறிவிக்கை அனுப்பப்பட் டதைத் தொடர்ந்து, தேர்தல் அதிகாரிகளைக் கொண்ட சிறப்புத் குழுக்கள் கடந்த சில நாட்களாக இந்த முக்கிய வாக்காளர்களின் வீடுகளுக்கே நேரில் சென்றன. தேர்தல் ஆணையம் நிர்ணயித்த ஆவணங்களைக் கொண்டு அவர்களின் விவரங்களை கள சரிபார்ப்பு மூலம் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சரிபார்ப்புக்குப் பிறகு, வரும் நவம்பர் 4-ஆம் தேதி வெளியிடப்படவுள்ள டில்லியின் இறுதி வாக்காளர் பட்டியலில் இவர்களது பெயர்கள் சேர்க்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண மக்கள் தங்களின் வாக்காளர் முகவரியையோ அல்லது விவரங்களையோ திருத்துவதற்கு அரசு அலுவலகங் களுக்கும் சேவை மய்யங்களுக்கும் அலைந்து திரியும் நிலையில், பிரபலங்களுக்கு மட்டும் அதிகாரிகளே நேரில் வந்து சரி பார்க்கும் இந்த நடைமுறை “சம உரிமை” என்ற ஜனநாயகத்தின் அடிப்படைக்கே முரணாக இருப்பதாகச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *