சென்னை, செப் 27 தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட் டில் உள்ள திருக்கோயில்களில், ஆகம விதிகளின்படி நிர்மாணிக்கப்பட்ட கோயில்களைக் கண்டறிய அரசால் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இக்குழு, மண்டல இணை ஆணை யர்கள் மற்றும் உதவி ஆணையர்கள் சமர்ப்பித்த 34,971 கோயில்கள் தொடர்பான விவரங்களை ஆய்வு செய்து, அதை அறநிலையத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.hrce.tn.gov.in) வெளியிட்டது. இந்த விவரங்கள் குறித்து பொது மக்கள் தங்களது கருத்து களையோ அல்லது விடுபட்ட விவரங் களையோ செப்டம்பர் 25-ஆம் தேதிக்குள் தெரிவிக்க ஏற்கனவே கோரப்பட்டிருந்தது. இந்நிலையில், பொதுமக்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்க கூடுதல் கால அவகாசம் வழங்க ஆகமக் குழு முடிவு செய்துள்ளது. அதன்படி, பொதுமக்கள் தங்களின் கருத்துருக்கள் மற்றும் விடுதல்களை வரும் அக்டோபர் 10, 2026 அன்று மாலை 5.45 மணிக்குள் கீழ்க்கண்ட வழிகளில் சமர்ப்பிக்கலாம்.
அஞ்சல் மூலம்: குழு உறுப்பினர்/செயலர், ஆகமக் குழு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகம், 119, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை – 600034. இணையதளம் மூலம்: www.hrce.tn.gov.in
