தோவாளை, செப். 24- அறிவுலக பேராசான், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா தோவாளை ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் செண்பக ராமன் புதூர் தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் கொண்டாடப்பட்டது.
அங்குள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாவட்ட கழகச் செயலாளர் கோ. வெற்றிவேந்தன் தலைமையில் மாவட்ட கழகத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் மாலை அணிவித்து மரியாதை செய்தார். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
திராவிடர் கழக மாவட்ட துணைச் செயலாளர் எஸ். அலெக்சாண்டர் முன்னிலை வகித்தார் அந்தப் பகுதியை சார்ந்த பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பொதுமக்களுக்கு தந்தை பெரியாரின் பகுத்தறிவு நூல்களும், துண்டறிக்கைகளும், இனிப்புகளும் வழங்கப்பட்டன.
தோவாளை ஒன்றிய கழகச் செயலாளர் வீராணமங்கலம் சி.அய்சக் நியூட்டன் நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பு பணியினை செய்தார்.
