டிரம்ப்பின் அழுத்தமா? மியான்மர் குழுக்களுக்குப் பயிற்சி அளித்த அமெரிக்க, உக்ரைன் கூலிப்படை வீரர்கள் டில்லி சிறையிலிருந்து விடுதலை!

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

புதுடில்லி, செப்.26 மியான்மரைச் சேர்ந்த ஆயுதக் குழுக்களுக்கு சட்ட விரோதமாக ட்ரோன் (Drone) பயிற்சி அளித்த வழக்கில் கைது செய்யப்பட்டு, டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க மற்றும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த கூலிப்படை வீரர்கள் இருவர் சத்தமில்லாமல் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெ ரிக்காவைச் சேர்ந்த பிரபல கூலிப்படை வீரரான மேத்யூ ஆரோன் வான்டைக் மற்றும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மற்றொரு நபர் ஆகிய இருவருமே இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களாவர்.

கைதி நடவடிக்கை

இந்திய எல்லைக்கு அருகில் செயல்பட்டு வரும் மியான்மர் கிளர்ச்சிப் படைகளுக்கு ட்ரோன்களை இயக்குவது மற்றும் தாக்குதல் நடத்துவது குறித்து இவர்கள் பயிற்சி அளித்து வந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கிய இவர்களது கைது நடவடிக்கை அப்போது பெரிதும் பேசப்பட்டது.

கைது செய்யப்பட்ட இவர்கள் மீது தீவிரவாத தடுப்பு சட்டமான ‘உபா’  உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. வழக்கமான சட்டப் பிரிவுகளின் கீழ் மட்டுமே வழக்கு தொடரப்பட்டதால், இருவருக்கும் நீதிமன்றம் எளிதில் பிணை வழங்கியது.

நீதிமன்றம் விதித்த ரூ.1 லட்சம் பிணைத்தொகை  மற்றும் இதர சட்ட நடைமுறைகள் அனைத்தும் பூர்த்தியானதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் (24.9.2026) இருவரும் திகார் சிறையிலிருந்து அமைதியாக விடுவிக்கப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மறைமுக அரசியல் மற்றும் ராஜதந்திர அழுத்தங்கள் காரணமாகவே, இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக செயல்பட்ட இந்த பன்னாட்டு கூலிப்படை வீரர்கள் மீது கடுமையான ‘உபா’ சட்டம் பாயவில்லையா என்ற கேள்வியும் விமர்சனமும் தற்பொழுது எழுந்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *