கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 26.9.2026

2 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* உச்சநீதிமன்றத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மீது குற்றவியல் நடவடிக்கை கோரும் மனு: சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) தொடர்பான சட்டவிரோத முடிவுகளுக்காக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் ஒருமித்த ஒப்புதல் இன்றி எடுக்கப்பட்ட எஸ்.அய்.ஆர். முடிவுகள் செல்லாது என அறிவிக்கவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

* நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்; தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக கோரிக்கை. எஸ்.அய்.ஆர்  நடைமுறையில் வாக்காளர் உரிமைகள் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டி, காங்கிரஸ் பல மாநிலங்களில் போராட்டம் நடத்தி ஞானேஷ்குமார் பதவி விலகலைக் கோரியுள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ஞானேஷ்குமார் பதவி விலகாவிட்டால் அக்டோபர் 2-ல் நாடு தழுவிய போராட்டம் – கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவிப்பு: சி.ஜே.பி. தேசிய ஒருங்கிணைப்பாளர் அபிஜீத் திப்கே, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகாவிட்டால் அக்டோபர் 2இல் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு. தேர்தல்கள் முறைகேடாக நடத்தப்படுவதாக கூறிக்கொண்டே, தங்களை அரசியல் ரீதியாக தொடர்ந்து நிலைநிறுத்திக் கொள்ள எதிர்க்கட்சிகள் தேர்தலில் பங்கேற்பதாகவும் அவர் விமர்சனம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* மாணவர் தேர்தலில் 50% பெண்கள் இடஒதுக்கீடு – உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் உறுதி. மாணவர் சங்கத் தேர்தல்களில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கும் மாநில அரசின் உத்தரவை உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் செல்லும் என உறுதி செய்தது.இதனால், புதிய இடஒதுக்கீடு முறையின்படி இம்மாத இறுதியில் மாணவர் சங்கத் தேர்தல்கள் நடைபெற வழிவகை ஏற்பட்டுள்ளது.

தி இந்து:

* எஸ்.சி., எஸ்.டி. எம்.பி.க்களுக்கு பேச போதிய நேரம் வழங்கப்படவில்லை – ஒன்றிய  அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி புகார்: முக்கிய மசோதாக்கள் மீதான நாடாளுமன்ற விவாதங்களில் எஸ்.சி., எஸ்.டி. எம்.பி.க்களுக்கு போதிய நேரம் வழங்கப்படுவதில்லை என ஒன்றிய அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தி டெலிகிராப்:

* பாலியல் துன்புறுத்தல் வழக்கில் பிரிஜ் பூஷன் விடு தலையை எதிர்த்து பெண் மல்யுத்த வீராங்கனைகள் மேல்முறையீடு. விசாரணை நீதிமன்ற தீர்ப்பு ஊகங்கள் மற்றும் ஆதாரமற்ற யூகங்களை அடிப்படை யாகக் கொண்டது என்றும், பாலியல் வன்முறை மற்றும் துன்புறுத்தலுக்கு உள்ளான பெண்களின் ‘எதிர்பார்க்கப்படும் நடத்தை’ குறித்த பழமையான, ஒரே மாதிரியான கருத்துகளை அடிப்படையாகக் கொண்டது என்றும் வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் – மூன்று பாஜக கூட்டணி கட்சிகள் கோரிக்கை: ராம் விலாஸ் பஸ்வானின் எல்.ஜே.பி., உபேந்திரா குஷ்வாகா கட்சியான ஆர்.எல்.எம்., சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆகிய மூன்று என்.டி.ஏ. கூட்டணிக் கட்சிகள், தேர்தல் நடைமுறை மற்றும் வாக்காளர் பட்டியல் எஸ்.அய்.ஆர். குறித்து தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தல். பொதுமக்களிடையே எழுந்துள்ள சந்தேகங்களை போக்கி, தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையை பாதுகாக்க இது அவசியம் என அவை தெரிவித்துள்ளன.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *