திராவிட இயக்க முன்னணித் தலைவர்களுள் ஒருவரான பி.டி.ராஜன் நினைவுநாள் இன்று (25-09-1974)
பி.டி.ராஜன் என்கிற பொன்னம்பல தியாகராஜன் நீதிக்கட்சியின் தலைவர் களுள் ஒருவரும், சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகத் திகழ்ந்த வரும் ஆவார். இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜிலுள்ள ‘த லேஸ் ஸ்கூல்’ கல்லூரியில் வரலாறும், ஆக்ஸ்போர்டிலுள்ள ஜீசஸ் கல்லூரியில் சட்டமும் பயின்றார். 1920 ஆம் ஆண்டு நீதிக்கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பி.டி.ராஜன் 1936 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 முதல் ஆகஸ்ட் 24 வரை சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக பணியாற்றியவர் ஆவார். திராவிட இயக்க கொள்கைகளில் ஆழ்ந்த பற்றுக் கொண்டவரான இவர், பார்ப்பனரல்லாதாரை கோயில் அறங்காவலராக நியமிப்பது உள்ளிட்ட சமத்துவத்திற்கான செயற் பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் ஆவார். 1974 செப்டம்பர் 25 இல் தமது 82 ஆம் வயதில் அவரது சொந்த ஊரான உத்தமபாளையத்தில் மறைவுற்றார்.
திண்டுக்கல்லில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடைபெற்ற தந்தை பெரியார் அவர்களின் சிலை திறப்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கலந்து கொண்டு பெரியார் சிலையை திறந்து வைத்த நிகழ்வில் தந்தை பெரியார் அவர்களும் கலந்து கொண்ட நாள் இன்று (25-09-1970)
தகவல் :
பாணாவரம் பெ. வீரமணி
