கேதார்நாத்தில் குவிந்த 50 மெட்ரிக் டன் குப்பை! இமயமலை சுற்றுச்சூழலுக்கு ஆபத்து

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

டேராடூன், செப்.25 உத்தராகண்ட் மாநிலம் இமயமலையில் அமைந்துள்ள கேதார்நாத்தில், நடப்பு ஆண்டில் (2026) ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான வெறும் 5 மாதங்களில் மட்டும் 50.30 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டுகளின் மொத்தக் குப்பை அளவுகளுடன் ஒப்பிடுகையில் இது மிகப்பெரிய உயர்வு ஆகும்:

2023: 32.58 மெட்ரிக் டன், 2024: 26.10 மெட்ரிக் டன்,

2025: 21.40 மெட்ரிக் டன்.

மாத வாரியான தரவுகளின்படி, மே மாதத்தில் மட்டும் அதிகபட்சமாக 16.3 மெட்ரிக் டன் குப்பை உற்பத்தியாகியுள்ளது. மேலும், இந்த ஆண்டு இதுவரை 20 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவானதில், 18.5 மெட்ரிக் டன் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை

இந்த ஆண்டில் இதுவரை சுமார் 15 லட்சம் பக்தர்கள் கேதார்நாத்திற்கு வருகை தந்துள்ளனர். பக்தர்கள் வருகை அதிகரிப்பால், இமயமலை சுற்றுச்சூழல் மண்டலம் கடுமையான அச்சுறுத்தலைச் சந்தித்து வருகிறது. மிகக் குறுகிய காலத்தில் இந்த அளவிற்கு குப்பைகள் குவிவது கேதார்நாத் பகுதியைக் குப்பை மேடாக மாற்றும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பெரும் கவலை தெரிவித்துள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *