உதவி ஆய்வாளர் பணி

3 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

எஸ்.எஸ்.சியில் உதவி ஆய்வாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. டில்லி காவல்துறையில் உதவி ஆய்வாளர், சிஆர்பிஎஃப் ஆண்கள், பெண்கள் என பல்வேறு பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பபடுகின்றன. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 1,12,400 வரை ஊதியம் வழங்கப்படும். இது குறித்த முழு விவரங்களை இங்கு காணலாம்.

ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையமான எஸ்.எஸ்.சி ஒன்றிய அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது. இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிலையில், சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்: டில்லி காவல்துறையில் உதவி ஆய்வாளர் (நிர்வாகம்)

பொதுப் பிரிவு – 184 பணியிடங்கள்

(முன்னாள் ராணுவத்தினர் ) – 12

முன்னாள் ராணுவத்தினர் (சிறப்புப் பிரிவு) – 09

டில்லி காவல்துறையில் உதவி ஆய்வாளர் (நிர்வாகம்) – பெண்கள் –

பொதுப் பிரிவு – 112

மத்திய ஆயுதக் காவல் படைகளில் (CAPFs) உதவி ஆய்வாளர் (பொதுப் பணி – GD)

சிஆர்பிஎப் ஆண்கள் – 225

சிஆர்பிஎப் பெண்கள் – 29

பிஎஸ்எப் ஆண்கள் – 435

பிஎஸ்எப் பெண்கள் – 22

இந்தோ திபெத் படை- ஆண்கள் – 159

பெண்கள் – 28

சிஅய்எஸ்.எப் ஆண்கள் – 200

சிஅய்எஸ்.எப் பெண்கள் – 50

எஸ்.எஸ்.பி ஆண்கள் – 154

எஸ்.எஸ்.பி பெண்கள் – 18

உதவி ஆய்வாளர் (தீயணைப்புப் பிரிவு) சிஐஎஸ்எப் ஆண்கள் – 234

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தீ அணைப்புத்துறை பிரிவை சேர்ந்த பணியிடங்களுக்கு இயற்பியல், வேதியியல், கணிதம் உள்ளிட்ட பிரிவுகளில் பட்டம் முடித்து இருக்க வேண்டும். மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், ஆட்டோமொபைல், கெமிக்கல், மைனிங், ஏரோநெட்டிக்கல் உள்ளிட்ட பிரிவுகளில் டிப்ளமோ என்ஜினியரிங் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 01.08.2026 தேதிப்படி 20 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது, 02.08.2001 -க்கு முன்பாகவோ, 01.08.2006 -க்கு பிறகோ பிறந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.

எஸ்.அய். (FIRE) பணிக்கு 18 முதல் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். 02.08.1996 க்கு முன்போ 01.08.2008 க்கு பிறகே பிறந்தவர்கள் விண்ணப்பிக்க முடியது. அரசு விதிமுறைகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. அதாவது எஸ்சி எஸ்டி பிரிவினர் என்றால் 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 ஆண்டுகளும் என தளர்வுகள் அழிக்கப்படும்.

ஊதியம்: எஸ்.அய். (ஜிடி): ரூ.35,400 முதல் ரூ. 1,12,400 வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு முறையை பொறுத்தவரை எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு, இரண்டாம் கட்ட எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவ சான்று அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம்.

நாடு முழுவதும் இதற்கான தேர்வு நடைபெறும். தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, வேலூர், கிருஷ்ணகிரி ஆகிய நகரங்களில் தேர்வு நடைபெறும்.

விண்ணப்ப கட்டணம்: தகுதியுள்ள தேர்வர்கள் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம். விண்னப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்க வரும் 30.09.2026 கடைசி நாளாகும்.

தேர்வு அறிவிப்பை படிக்க: https://ssc.gov.in/

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *