கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 23.9.2026

இணையவழி கையெழுத்து இயக்கம்

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

*“பெரிய மீன்கள் ஏன் பாதுகாக்கப்படுகின்றன?” “குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டுமல்ல; இவை அனைத்தும் நடந்தபோது பொறுப்பில் இருந்தவர்களும் பொறுப்பேற்க வேண்டும்; கோயில் அறக்கட்டளை ஏன் கலைக்கப்படவில்லை?” என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி.

தி டெலிகிராப்:

* அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் தனது கட்சியையும் இணைத்துக் கொள்ளுமாறு சமாஜ்வாதி கட்சி மற்றும் காங்கிரசிற்கு ஏஅய்எம்அய்எம் (AIMIM) தலைவர் அசாதுதீன் ஒவைசி அக்டோபர் 2-ஆம் தேதி வரை காலக்கெடு விதித்துள்ளார்; இல்லையெனில், பாஜக அல்லாத பிற சக்திகளுடன் கூட்டணி அமைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* மகாராட்டிரா யு.சி.சி. குழுவிலிருந்து உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.சி. சவான் பதவி விலகல்: நடைமுறை தொடர்பான கவலைகளை அவர் முன்வைத்தார். பொதுமக்களின் கருத்துகளை அறியும் கேள்வித்தாள் உள்ளிட்ட உறுப்பினர்களின் பரிந்துரைகள் பரிசீலிக்கப்படவில்லை என்றும், தலைவரால் இறுதி செய்யப்பட்ட கேள்வித்தாள் ஏற்கெனவே வெளியிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *