பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் முதலமைச்சருக்குத் தெரியாமல் அரசு ஆணை வெளியாகவில்லை! அமைச்சர் வெங்கட்ரமணன் ஒப்புதல் வாக்குமூலம்

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, செப். 22-  ‘பட்டினப்பாக் கத்தில் புதிய தலைமைச் செயலகம் விவகாரத்தில், முதலமைச்சருக்குத் தெரியாமல் அரசாணை வெளியானது என்பது தவறான கருத்து’ என அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் சமூக நலத்துறை சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமூக வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் வெங்கட்ரமணன், 100 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது: ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி குடும்ப அட்டைகளுக்கு 100 சதவீத பயோமெட்ரிக் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விரல் ரேகை பதிவு செய்யாத உறுப்பினர்களின் பெயர்கள் தற்காலிகமாக நீக்கப்படலாம்.

அவர்கள் பதிவு செய்யும்போது மீண்டும் பெயர்களைச் சேர்த்துக் கொள்ளலாம். புதிய தலைமைச் செயலகம் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிகள் மட்டுமே தற்போது நடைபெற்று வருகின்றன.

திட்ட அறிக்கை தயாரான உடனேயே அங்கு கட்டடம் கட்டப்பட்டு விடும் என்று அர்த்தமில்லை. ஒரு திட்டத்துக்கான அரசாணை அனைத்துச் செயல்முறைகளுக்கும், ஆய்வுகளுக்கும் பிறகு முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அரசாணையாக வெளியாகும்.

எனவே முதலமைச்சருக்குத் தெரியாமல் அரசாணை வெளியானது என்பது தவறான கருத்து. இந்த அரசு எப்போதும் மீனவர்களுக்கும், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் உறுதுணையாக இருக்குமே தவிர, எந்தச் சூழலிலும் மக்கள் விரோதப்போக்கோடு செயல்படாது.

நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் அல்லது முறைகேடுகள் நடப்பதைத் தடுக்க 7 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே எந்தவித அழுத்தமும் இல்லை.

அனைத்துத் தலைவர்களும், அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் மிகவும் இணக்கமாகவும் ஆதரவாகவும்தான் செயல்பட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *