இடைத்தேர்தலில் ஆட்சியாளர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும்! எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்

இணையவழி கையெழுத்து இயக்கம்

பூந்தமல்லி, செப். 21- இடைத் தேர்தலில் ஆட்சியாளர்களுக்கு சரியான தண்டனை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பூந்தமல்லி நகர இளைஞரணி அமைப்பாளர் முகமது ராஷிக் – மரியம் பாத்திமா ஆகியோரின் திருமணம் வேலப்பன்சாவடியில் நேற்று (20.9.2026) நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:

இசுலாமியர்களுக்கும் திமுகவுக்குமான உறவு காயிதே மில்லத் காலத்தில் உருவானது. இந்த உறவு நாளுக்கு நாள் வளர்ந்து மிகவும் வலிமையாகியுள்ளது. தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு தற்போது எந்த நிலைமையில் உள்ளது என்று எல்லோருக்கும் தெரியும். 19.9.2026 அன்று மட்டும் தமிழ்நாட்டில் 8 படுகொலைகள் நடந்துள்ளன.

மின்வெட்டு உச்சத்தில் உள்ளது. முதலமைச்சரின் பெரம்பூர் தொகுதியிலேயே மின்வெட்டைக் கண்டித்து மக்கள் சாலையில் போராடி வருகின்றனர். தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட இதுவரை நிறைவேற்றவில்லை. ஒன்று நாம் கொண்டு வந்தத் திட்டத்தை ரத்து செய்து இருக்கிறார்கள்; அல்லது நமது திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறார்கள். சட்டப் பேரவையில் சட்டம் ஒழுங்கு குறித்து முதலமைச்சரிடம் 16 கேள்விகளைக் கேட்டேன். தயார் செய்துகொண்டு வருவதாகக் கூறிவிட்டுச் சென்றவர், 3 நாள் கழித்து வந்து, நான் கேட்ட கேள்விக்கு முறையான எந்த பதிலும் சொல்லவில்லை. மாறாக 50 ஆண்டுகளுக்கு முந்தைய சர்க்காரியா கமிஷன், மிசா பற்றி பேசினார்.

தற்போது உள்ள ஆட்சியாளர்கள் தாங்கள் ஆட்சிக்கு வந்துவிட்டதை அவர்களே இன்னும் நம்பவில்லை. எந்தக் கேள்வி கேட்டாலும் திமுக ஆட்சியில் நடந்தது என்று திமுக மீது பழிபோடுவதை மட்டுமே முதலமைச்சரும், அமைச்சர்களும் செய்து வருகிறார்கள். அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் செயலில் இந்த அரசு இறங்கியுள்ளது. இப்படி விலைக்கு வாங்கியதால்தான் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இதை மக்களுக்கு நாம் அம்பலப்படுத்த வேண்டும். அதற்கு சரியான தண்டனையை வருகின்ற இடைத்தேர்தலில் வழங்க வேண்டும்.

ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் திமுக என்றும் மக்களுக்காக களத்தில் நிற்கும் என்பதை இந்த தேர்தல் மூலமாக நாம் நிரூபிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *