சென்னை, ஆக. 27- மாநில மனித உரிமைகள் ஆணையத்துக்கு 2 உறுப்பினர் களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு பொதுத் துறை செயலர் இ.சுந்தரவல்லி வெளியிட்ட அரசாணை விவரத்தில் கூறியிருப்பதாவது: சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, முன்னாள் அய்ஏஎஸ் அதிகாரி ஏ.சுகந்தி ஆகியோரை மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பி னர்களாக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் நியமித்துள்ளார். இவர்களது பதவிக் காலம் 3 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை. இதில் எது முதலில் நிகழ்கிறதோ அதுவரை இப்பதவியில் இருப்பார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
