திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் தேர்தல் பிரச்சாரம்!

மதுராந்தகம் தேர்தல் களப்பணியில் தீவிரமாக செய லாற்றிவரும் மேனாள் அமைச்சரும், திருவண்ணாமலை மாவட்ட திமுக செயலாளருமான எ.வ.வேலு, மேனாள் அமைச்சரும், மாவட்ட திமுக செயலாளருமான
தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் ஆகியோருக்கு தந்தை பெரியார் 148 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, காஞ்சி மாவட்டத் தலைவர் அ.வெ.முரளி தலைமையில், மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், ஒக்கநாடு மேலையூர் அ.இராசப்பா ஆகியோர் இனிப்பு வழங்கினார்கள். மதுராந்தகம் வெற்றி வேட்பாளர் வழக்குரைஞர் பரந்தாமனுக்கு ‘தாய்வீட்டில் கலைஞர்’ புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
1.10.2026 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தேர்தல் பரப்புரையாற்றும் கூட்டத்தை அச்சரப்பாக்கத்தில் மிகச்சிறப்பாக நடத்துவோம் எனத் தெரிவித்தார்கள்.
