மதுராந்தகம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வழக்குரைஞர் பரந்தாமன் அவர்களை ஆதரித்து அக்.1 இல்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் தேர்தல் பிரச்சாரம்!

திராவிடர் கழகம்

மதுராந்தகம் தேர்தல் களப்பணியில் தீவிரமாக செய லாற்றிவரும் மேனாள் அமைச்சரும், திருவண்ணாமலை மாவட்ட திமுக செயலாளருமான எ.வ.வேலு, மேனாள் அமைச்சரும், மாவட்ட திமுக செயலாளருமான
தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் ஆகியோருக்கு தந்தை பெரியார் 148 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, காஞ்சி மாவட்டத் தலைவர் அ.வெ.முரளி தலைமையில், மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு  அ.இராமலிங்கம், ஒக்கநாடு மேலையூர் அ.இராசப்பா ஆகியோர் இனிப்பு வழங்கினார்கள். மதுராந்தகம் வெற்றி வேட்பாளர் வழக்குரைஞர் பரந்தாமனுக்கு ‘தாய்வீட்டில் கலைஞர்’ புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

1.10.2026 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தேர்தல் பரப்புரையாற்றும் கூட்டத்தை அச்சரப்பாக்கத்தில் மிகச்சிறப்பாக நடத்துவோம் எனத் தெரிவித்தார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *