பெரியாரின் பேரகராதி – படிப்போமா!

3 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

ன்று உலக மானுடப் பற்றாளர் தந்தை பெரியார் என்ற ஒப்பற்ற சுய சிந்தனையாளர் அவர்களது 148ஆவது ஆண்டு பிறந்தநாள் பெரு விழா  –திருவிழா.

உலகின் பற்பல நாடுகளிலும், அமெரிக்கா, அய்ரோப்பா, கனடா, ஆஸ்திரேலியா, தென்கிழக்கு நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், மியான்மா  (பழைய பர்மா), மத்தியக் கிழக்கு நாடுகள் பலவற்றிலும் கொண்டாடப்படுகின்ற நன்றித் திருவிழாவாக சிறப்புடன் நடைபெறுகிறது.

அந்த பகுத்தறிவுப் பகலவனின் கனிந்த அனுபவங்களும், கருத்தாழச் சிந்தனைகளும் நம் அறிவுப் பசிக்கான புத்துருக்குப் பொங்கலாகத் திகழாகவே இந்த பெரியாரின் பேரகராதியிலிருந்து சிறு குளிகை (Capsule) சிந்திக்க…

செயலாக்க முனைவோம்!

  1. ‘‘ஒழுக்கம் என்பது மற்றவர்கள் எப்படி உங்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்களோ, அந்தப்படியே அவர்களிடத்தில் நீங்களும் நடந்துகொள்வதே!
  2. எது அழகு? மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு.
  3. ‘ஒழுக்கம்’ என்பது பொதுச் சொத்து; ‘பக்தி’ என்பது தனிச் சொத்து.

‘பக்தி’ இல்லாவிட்டால் பெரும் பாதிப்பில்லை. ஒழுக்கம் இல்லையேல் எல்லாமே பாழ்பாழ் தான்!

  1. தன் தகுதிக்கு மீறி வாழ ஆசைப்படும் – முயலும் எவரது வாழ்க்கையானாலும் அது இறுதியில் கடன் முதலிய பல சிக்கல், சீரழிவுகளில் தான் கொண்டு போய் முடியும்.
  2. ‘நான், கடன் என்று வருகிற – எவ்வளவு நெருங்கிய நண்பர்களாலும், அதற்கு இசைய மாட்டேன்; ஒரு சிறு தொகையை ‘நன்கொடை’யாகவே கொடுத்து அனுதாபத்துடன் அனுப்பி வைப்பேன். கடன் கொடுத்தால் அவரது நட்பையே பிறகு இழக்க வேண்டிய நிலை அடுத்த கால கட்டத்தில் ஏற்படுமே!
  3. சிக்கனம் வேறு; கருமித்தனம் வேறு; ஆடம்பரம் வேறு; சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். தேவைக்கு ஏற்ப செலவழிப்பது ‘சிக்கனம்’; தேவைக்கே செலவழிக்காதது ‘கருமித்தனம்’; தேவைக்கு மேல் செலவு செய்தால் ஆடம்பரம்.
  4. ‘தகுதி’, ‘திறமை’ என்பது: மேல் ஜாதியினர் – ஆதிக்கவாதிகளால், ஒடுக்கப்பட்டு காலம் காலமாக கல்வி மறுக்கப்பட்ட கீழ் ஜாதியினர், தங்களது சொந்த உழைப்பு, ஆற்றிலினால் முன்னேற முயற்சித்தாலும் முடியாத வஞ்சக வடிகட்டலுக்கு மறுபெயர் ‘தகுதி’, ‘திறமை’ என்ற சூழ்ச்சி வலை.
  5. பிறப்பும் – இறப்பும் அற்றவர் ‘கடவுள்’ என்றால் – அவருக்கு எதற்கு பிறந்த நாள்ராமநவமி, கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி?
  6. புராணங்கள் என்பவை புளுகு மூட்டைகள் – வரலாறு அல்ல.
  7. ‘ஆத்மா’வை கண்டுபிடித்த மக்கள் – பாமர மக்களைவிட, கொடிய மோசடிப் பேர் வழிகளைப் போன்று எவரும் இருக்க முடியாது.
  8. மனித சமூகத்தில் சரி பகுதி உள்ள பெண்களை அடிமையாக்கி வைத்து, ‘கீழிலும் கீழானவர்கள் அவர்கள்’ என்று சமூகத்தின் சரி பகுதியை செயலற்றுப் போகும் வகையில் செய்திடல் என்பது கேட்டிலும் மிகப் பெரிய கேடு.
  9. பெண்களுக்கு மட்டும்தான் கற்பு அவசியமா? அது ஆண்களுக்கு வேண்டாமா?
  10. ஆண் எஜமான், பெண் அடிமை என்ற பேதமுள்ள மனித சமூகத்தைப் பிரிக்கும் வருண தர்மத்தை, மனிதாபிமானமுள்ள எவராலும் ஏற்க முடியுமா?
  11. இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு கால்கள் சரியாக இயங்காமல் ஒன்று இயங்கினால் போதும் என்பதை ஏற்பீர்களா? இரண்டும் சரியாக இயங்கினால் பேதம், தானே மறையும் அல்லவா?
  12. குழந்தைகள் கொஞ்சுவதற்காக என்றால் அதைஎங்கும் உள்ள பராமரிப்பற்ற குழந்தை நாமே ‘‘பெற்றுக் கொண்டு’’ நல்ல முறையில் வளர்க்கலாமே? மகிழலாமே! பின் ஏன் தனக்கே குழந்தை வேண்டும் என்பது சரியாகும்?
  13. அறிவுக்கு அறிவு தேவையில்லை; செயலுக்கே அறிவு தேவை!
  14. எல்லாம் கடவுள் செயல் – அவன்செயல் என்றால், நாட்டில் நடைபெறும் கொலை, கொள்ளை எல்லாம் எவன் செயல்?
  15. என்னைப் பொறுத்த வரையில், ‘பற்று’ என்பது மானிடப் பற்று – அறிவு வளர்ச்சிப் பற்று தான்; மற்ற ‘பற்றுகள்’ என்று எதுவும் இல்லை – நான் மனிதர்களை நேசிப்பதால்!

‘‘உயர் எண்ணங்கள் மலரும் ேசாலை’’ என்றார் புரட்சிக் கவிஞர். அதோடு மட்டுமல்லாமல் ‘‘மண்டைச் சுரப்பை உலகு தொழும்’’ (பின்பற்றுமாறு) என்று கூறியுள்ளார் எப்படிப்பட்ட ஆழ்ந்த முன்னோக்கு  பாருங்கள்!

‘‘சுயமரியாதை என்பது நாம் யாருக்கும் தாழாமல், நம்மை எவரும் தாழ்த்த விடாமல் காத்துக் கொள்வது என்பது அகராதியின் ஒளி வீச்சுதான்!

இவற்றைக் கடைப்பிடிக்க வேண்டியது – பெரியாருக்காக அல்ல; நமக்காக, நம் வளர்ச்சிக்கவே!

மறவாதீர்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *