அறிவின் சிகரம் வால்டேர்’ என்றார் அறிஞர் நீட்சே. தந்தை பெரியார் நீட்சேயின் காலத்தில் வாழ்ந்திருந்தால் பகுத்தறிவின் ஒப்புயர் வற்ற தலைவர் என்று பெரியாரை நீட்சே புகழ்ந்திருப்பார் என்பதை நாம் அறிவோம். பகுத்தறிவே தந்தை பெரியாரின் உயிர்மூச்சாகும். ஆளுமைத் தன்மையுடனும் தெளிந்த அறிவுக் கூர்மையுடனும் பெரியார் பல்வேறு பொருள்களைப்பற்றி மக்களிடையே பேசினார். அறுவை மருத்துவர் தம் கையிலுள்ள கத்தியை எப்படிக் கவனமாகக் கையாள்வாரோ அதைப்போன்று பெரியார் மிகுந்த கவனத் தோடு சமூகச் சிக்கல்களை ஆராய்ந்து தம் கருத்துக்களை வெளியிட்டார்.
அவர் வெளியிட்ட கருத்துக்கள் யாவும் அவருடைய இயல்பான சுயசிந்த னையில் தோன்றியவை; எவராலும் மறுக்க முடியாதவை; இதற்குமுன் வேறு எவரும் வெளிப்படுத்தாத; திடுக்கிடத்தக்க பல உண்மைகளைப் பெரியாரின் பகுத்தறிவுப் பார்வை வெளிப்படுத்தியது. எல்லாவற்றிற்கும் மேலாக அறிவுலகச் சிந்தனை வரலாற்றில் இடம்பெற்றுள்ள சீரிய சிந்தனையாளர்களைப் போலவே பெரியாரும் சமுதாயப் புத்துருவாக்கப் பணிக்குத் தம்மை ஒப்படைத்துக் கொண்டார்.
நெடுங்காலமாய் நீடுதுயில் கொண் டிருந்த மக்களைப் பெரியார் விழித்தெழச் செய்தார். நினைப்பிற்கெட்டாத நெடுங்காலந்தொட்டு, வெளிப்படைத் தன்மையற்ற, பயன்தராத வெறுமைக் கோட்பாடுகளால் அடிமைகளாக்கி வைக்கப்பட்டிருந்த இந்துக்களின் மூளையைத் தூய்மைப்படுத்தினார் பெரியார். மனிதச் சிந்தனை ஓட்டத் தில் படிந்து கிடக்கும் தவறான கருத்துக ளையும்கூட, எண்ணங்களையும் போக்கு வது என்பது அவ்வளவு எளிதான வேலையல்ல. இந்தத் தொண்டறப் போரில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ள ஒருவர், மலைப்பைத் தரக்கூடிய, கடினமான, எண்ணற்ற தடைகளையும். இடையூறுகளையும் எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது.
பெரியாருக்கு முன்பு வாழ்ந்த மெய்யியல் (தத்துவ) அறிஞர்களைப் போலவே தந்தை பெரியாரும் இத்த கையத் தடைகளை எதிர்த்து அஞ்சாத நெஞ்சுரத்தோடு போராடினார். எண்ணிலடங்காத மக்களைக் கொன்று எல்லைகளை விரிவுபடுத்தி வெற்றிபெறுபவன் சிறந்த தலைவன் அல்லன்; உண்மை எனும் போர்வாளால் மக்கள் உள்ளங்களை வெற்றி கொள்ப வனே சிறந்த தலைவனாவான் தமிழ் மக்கள் தந்தை பெரியாரை மதித்துப் போற்றுகிறார்கள். ஏனென்றால் ‘பகுத்தறிவு’ எனும் மெய்ம்மையால் மக்கள் மனங்களை வென்றவர் பெரியார்.
– பேராசிரியர் ஆர்.பெருமாள் எழுதிய ‘உலக தத்துவ சிந்தனையாளர்களும் தந்தை பெரியாரும்‘ ஓர் ஒப்பியல் ஆய்வு
