தேசியம் என்பது என்ன?
தேசியம் என்பதும் கடவுள், மதம், ஜாதி போன்றவற்றைப் போலவே ஒரு போலி உணர்ச்சியே! ஏனெனில் தேசிய உணர்ச்சி என்பதானது இன்று உலகப் பொதுமக்கள், அதாவது உலகில் எங்கும் பெரும்பான்மையாக இருந்துவரும் மக்கள் தொழில் இன்றியும், கஷ்டப்படும் ஓர் உண்மையை மறைப்பதற்கும், அப்படிப்பட்ட கஷ்டப்படும் மக்கள் ஒன்று சேர்ந்து தங்களுடைய நிலைமைக்குப் பரிகாரம் தேடுவதைத் தடைப்படுத்தவும் ஆங்காங்குள்ள செல்வந்தர்களால், அதிகாரப் பிரியர்களால், சோம்பேறி வாழ்க்கைச் சுபாவிகளால் கற்பிக்கப்பட்ட சூழ்ச்சியேயன்றி வேறென்ன?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
