மலேசியா, செப். 16- மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகத்தின் ஏற்பாட்டில், கடந்த 13.9.2026 அன்று நடைபெற்ற மத்தியச் செயலவைக் கூட்டத்தில், தந்தை பெரியார் 148ஆவது பிறந்தநாள் – சமூகநீதி நாள் விழாவைச் சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, எதிர்வரும் 19.9.2026 அன்று மாலை 5.00 மணிக்கு, பிரிக்பீல்ட்சு ருக்குன் தெத்தாங்கா மண்டபத்தில், தந்தை பெரியார் பிறந்தநாள் விழா, கழக மதியுரைஞர் ‘கொள்கைச்சுடர்’ இரெ.சு.முத்தையா சிறப்புரையோடு; கழகத் தலைவர் நாக.பஞ்சு தலைமையில் விழா நடைபெற உள்ளது.
எனவே, கழக மத் தியச் செயலவை உறுப் பினர்களும், கழகத் தோழர்களும் தவறாமல் மறவாமல் வந்து கலந்து கொண்டு விழாவைச் சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.
குறிப்பு: நடைபெறும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில், 7 முதல் 17 வயது வரையிலான இளையோருக்காக, மாதம் இருமுறை இயங்கலை வழியாக இலவசமான பெரியாரியல் சிந்தனை மற்றும் கொள்கைப் பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படவுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம்.
சுயமரியாதை – பகுத்தறிவு – சமத்துவம் ஆகிய அடிப்படைகளில், இளையத் தலைமுறையைச் சிந்திக்கவும் கேள்வி கேட்கவும் உருவாக்குவதே இப்பயிற்சியின் நோக்க மாகும்.
இப்பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர்; தமிழ் முல்லை பஞ்சு – தொடர்புக்கு; 0162774779
மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழக பொதுச் செயலாளர் ‘பெரியார் பெருந்தொண்டர்’ அன்பரசன் சண் முகம் இவ்வாறு தெரி வித்துள்ளார்.
