பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரிகளில் சமூக நீதி நாள் உறுதிமொழி தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் உத்தரவு!

இணையவழி கையெழுத்து இயக்கம்

திராவிடர் கழகம்

சென்னை, செப் 16 தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17-ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் ‘சமூக நீதி நாளாக’ கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் செப்டம்பர் 17, 2026 (வியாழக்கிழமை) அன்று சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்க வேண்டும் என தமிழ்நாடு அரசின் தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அனைத்து பாலிடெக்னிக் கல் லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களின் முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது
தந்தை பெரியார் பிறநதநாளான 17.09.2026 அன்று முற்பகல் 11.00 மணிக்கு தங்கள் கல்லூரி யில் “சமூக நீதி நாள்” உறுதிமொழி ஏற்கும் படி அனைத்து கல்லூரி முதல்வர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது இந்த உத்தரவால் நாளை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் பெரியாரின் சமூக நீதி கருத் துக்களை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்கப்பட உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *