செய்யாறில் தந்தைபெரியார் 148ஆவது பிறந்த நாள் விழா! சமூகநீதி நடை!

இணையவழி கையெழுத்து இயக்கம்

செய்யாறு, செப். 15- செய்யாறு மாவட்ட திராவிடர் கழக கலந்துறவாடல் கூட்டம் 12.9.2026 அன்று மாலை ஆறுமணிக்கு படிகலிங்கம் மருந்தகத்தில் மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன் தலைமையில் உற்சாகமாக நடைபெற்றது.

மாநில ஒருங்கிணைப் பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் பங்கேற்று அறிவாசான் தந்தை பெரியார் பிறந்த நாளை நன்றித் திருவிழாவாக கொண்டாட வேண்டிய அவசியத்தையும், தமிழர் தலைவர் அவர் களின் ஓய்வறியா உழைப்பி னையும், கழகப் பொறுப் பாளர்களும், தோழர்களும் ஆற்ற வேண்டிய கடமைகளையும் விளக்கியு ரையாற்றினார்.

பொதுக்குழு உறுப் பினர் என்.வி.கோவிந்தன், மாவட்டத் துணைத் தலைவர் அ.நாகராசன், மாவட்ட ப.க. தலைவர் வடமணபாக்கம் வி.வெங் கட்ராமன், இளைஞரணித் தலைவர் வெங்கடேசன், ஆசிரியர் முபாரக், மனோஜ்குமார், த.அனிஷ் ஆகியோர் விழா சிறக்க கருத்துரை வழங்கினார்கள்.

அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார் 148ஆவது பிறந்த நாளான செப் – 17அன்று புத்தாடையுடுத்தி,  இனிப்பு வழங்கி, தந்தை பெரியார் சிலை படங்களுக்கு மாலை யணிவித்து மகிழ்வதென முடிவு செய்யப்பட்டது.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் பிறந்த நாள் மகிழ்வாக  27.9.2026 அன்று சமூநீதி நடை ஏற்பாடு செய்வதென முடிவு செய்யப்பட்டது.

தந்தை பெரியார், அன்னை மணியம் மையார், தமிழர்தலைவர் ஆகியோரின் பேரன்பைப் பெற்ற செய்யாறு பா.அருணாச்சலம் அவர் களின் நூற்றாண்டு விழாவில் 6.11.2026 அன்று பங்கேற்க ஒப்புதல் வழங்கிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள் கிறது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *